பக்கம்:வைணவ உரைவளம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 189 இருந்தார் தம்மை யுடன்கொண்டங் கெழிலார் பிலத்துப் புக்கொளிப்ப, கருந்தாள் சிலைக்கைக் கொண்டானுர் கண்ண புரம்நாம் தொழுதுமே." [அன்று-முன் ஒரு காலத்தில்; வெம்சமத்துகொடிய போர்க் களத்தில்; பொன்றமுடியும் படியாக; புள்-கருடப் பறவை; பெருதோள்-வலியதோள்; புரள-புரளும் படியாக, போந்த அரக்கர்-அவனைத் தவிர மற்ற அரக்கர்கள்; பிலத்து-பாதாளத்தில்; புக்கு ஒளிப்ப-புகுந்து மறைய, கருந்தாள் சிலை-வயிரம் பற்றித் திண்ணிதான சிலை) திருக்கண்ணபுரம் மங்களாசாசனத் திருமொழியில் ஒரு பாசுரம். :பொருந்தா அரக்கர்களைக் கொன்று, மாலி யின் தலை நிலத்தில் புரளும்படி செய்து, ஏனையோர்கள் பிலத்து வழியாக பாதாளம் புகுந்து மறையும்படி செய்த சக்கரவர்த்தித் திருமகனின் இருப்பிடம் கண்ணபுரம் ஆகும்' என்கின்றார். இதில் அடங்கியுள்ள இதிகாசம் : ககேசன் என்பவன் ஒர் இராக்கதன். அவனுக்கு மாலியவான், மாலி, சுமாலி என்ற மூன்று மைந்தர்கள். இவர்கள் தவம் புரிந்து பெருமை பெற்று இலங்கையில் குடி புகுந்து திருமணம் புரிந்து கொண்டு பல மக்களைப் பெற்றதும், தேவர்கன் சிவபெருமானை அ ைடக் கலம் புகுந்து அவர் சொன்ன உபாயத்தினால் சீமந் நாராயணனைச் சரணமடைந்ததும், அவர் அவர்கட்கு அபயமளித்ததும்; அது தெரிந்து அரக்கர்கள் கோபங் கொண்டு படையெடுத்து தேவ லோகம் சென்றதும், அப்பொழுது கேசவன் கருடன்மேல் இவர்ந்து அங்கு வந்து தோன்ற அரக்கர்கள் அவரைச் 13. பெரி. திரு. 8.6;3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/214&oldid=920825" இலிருந்து மீள்விக்கப்பட்டது