பக்கம்:வைணவ உரைவளம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி | 93 பகவன் பரசுராமனிடம் குருகுலவாசம் செய்து வேதங் களைக் கற்று ஆயுதப் பயிற்சியும் பெறுவார்: தரும பரிபாலனம் செய்வதே குருதட்சிணை என்று பரசுராமன் அளிப்பார். பின்னர் தந்தையிடம் அநுமதி பெற்று விசுவசித், அசுவமேதம் முதலிய யாகங்களைப் புரிவார். முதலில் பெளத்தர்களை ஒழிப்பார்; பின்னர் யவநர்களை ஒழித்துக் கட்டுவார். இத்தேசங்சளில் தன்னைப் பின் தொடர்ந்து வரும் அரசர்கட்கு முடி சூட்டுவார். இதனால் கவி மிகவும் சீற்றமுற்று அதர்மம், அஞ்ஞானம் முதலியவற்றுக்கு அதிஷ்டான தேவைகளாக இருப்பவர்களைக் கூட்டிக் கொண்டு எம்பெருமானுடன் போர் புரிவான். கல்கி பகவான் அவனைப் பல வகைகளிலும் பங்கப்படுத்துவார்; அவனை வெட்டப் போகுந் தருணத்தில் அவன் பகவான் பாதங்களில் பணிந்து தன்னுயிரை மாத்திரம் தப்ப வைத்துக் கொண்டு இவ்வுலகை விட்டு ஓடிப்போய் ஒளிந்து கொள்வான். அதன்பின் அவன் தோழர்களாகிய கோகன் விகோகன் என்ற இருவர் எம்பெருமானோடு போர் புரிவார். எத்தனை அடி அடித்தாலும் அவர்கள் மாய்வ தில்லை. இருவரையும் ஒரே காலத்தில் கொல்ல வேண்டும் என்பதை நான்முகன் மூலம் அறிந்து அவர்கள் இருவர் தலையிலும் ஒரே சமயத்தில் அடிக்க அவர்கள் மாண்டு போவார்கள். இப்படியாக கல்கி பகவான் உலகிலுள்ள தியோர்களையெல்லாம் கொன்று மறத்தை வேரறுத்து அறத்தை நிலை நாட்டிக் கிருத யுகத்தைத் தோற்று விப்பார். பின்னர் தம் பெற்றோர்கட்கு வீடு பேறு நல்கி அவதாரப் பயனைத் தலைக் கட்டின பிறகு பதரிகாச்ரமத் திற்கு எழுந்தருளி மற்றவர்களைப்போல் யோகாசனம் செய்து திருவாழி திருச்சங்கு முதலிய திவ்வியாயுதங்க ளோடும் கூடிய தமது தெய்வத் திருமேனியுடன் காட்சி அளிப்பார். இந்நிலையில் பரமபதத்திலிருந்து அனந்தன், கருடன், விஷ்வக்சேநர் முதலிய நித்திய சூரிகள் பூர்ண கும்பம் ஏந்தி சாமகானம் ஒலித்துக் கொண்டு வந்து தம் வை.-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/218&oldid=920829" இலிருந்து மீள்விக்கப்பட்டது