பக்கம்:வைணவ உரைவளம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 94 வைணவ உரைவளிம் திருவடி தொழுவர். அதன்பின் தம்முடைய சோதிக்கு எழுந்தருள்வார். 36 கைம்மான மதயானை யிடர்தீர்த்த கருமுகிலை மைம்மான மணியை மணிகொள் மரகதத்தை எம்மானை யெம்பிரானை யீசனை யென்மனத்துள் அம்மானை, அடியேன் அடைந்துய்ந்து பிழைத்தேனே." (மானம் கை-நீண்ட துதிக்கை; இடர்-துயரம்: கருமுகில்- காளமேகம்; மை-மை நிறம்: மானம் மணி-பெருவிலை பெறும் நீல இரத்தினம்; மரகதம்-பச்சைமணி, உய்ந்துபிழைத்து) திருக்கண்ணபுரத்துச் செளரிராஜன்மீது மங்களா சாசனத் திருமொழியில் ஒரு பாசுரம், கண்ணபுரத் தம்மானுக்கன்றி அடியேன் வேறொருவருக்கு உரியேனல் லேன்' என்கின்றார் ஆழ்வார். மை மான மணியை : இரத்தினத்திற்கும் எம்பெருமா னுக்கும் பல நிலைகளில் ஒப்புமை உண்டு. (l) இரத்தினத்தைச் சொந்தமாகவும் அநுபவிக்கலாம்: விற்பனை செய்து வேறு பொருள்களையும் பெறலாம். அபபடியே எமபெருமானைப் புருஷார்த்தமாகவும்

  1. 4. பெரி. இமு. 8.0s I
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/219&oldid=920830" இலிருந்து மீள்விக்கப்பட்டது