பக்கம்:வைணவ உரைவளம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiv போற்றுவர்; இஃது இவர்தம் கவித்துவம்பற்றியது. ஆழ்வார்கள் பாசுரங்களில் ஆழங்கால் பெற்ற இவரது அநுபவம் இவர் பாடல்களை ஏழுமலையான் இலட்டுபோல் இனிக்க வைக்கின்றது: பச்சைக் கர்ப்பூர மணம் இலட்டில் கமழ்வதுபோல் பக்திமணம் இவர்தம் பாடல்களில் கமழ் கின்றது; சொல்வளமும் கொழிக்கின்றது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பேரகராதித் துறையில் பணியாற்றும் இவருக்கு இவர் மனத்தில் குடிகொண்டு நெருடும் பல்லாயிரக் கணக்கான பாடல்கள் சொற்பொருளுக்கு மேற்கோள்களாக அமைவதில் பெருந்துணை புரியும் என்பதற்கு ஐயம் இல்லை. ஏற்கெனவே அடியேனின் இலக்கண இலக்கிய அறிவியல் பணியை, கற்றவர்க்குப் புலனாகாக் காப்பி யத்தைக் கலைமெருகு கொடுத்தினிதே யறியச் செய்தாய்; பொற்றொடியார் தமைமணக்கும் காளை கட்குப் பொலிவுடைஇல் லறநெறியைப் புரியச் செய்தாய்; கொற்றமுறும் அணு நுட்பம் இனிதே யாய்ந்து குளிர்தமிழிற் பகர்ந்துள்ளம் தெளியச் செய்தாய்: உற்றகலைத் திங்கட்ருப் பயணம் செய்த ஒளிநெறியை உளந்தோறும் விரியச் செய்தாய்." என்று காட்டி வாழ்த்தியவர். இத்தகைய நண்பர் இப்பொழுது இந்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் நல்கியமைக்கு அடியேனின் உளங்கனிந்த நன்றி. சிறப்புப் பாயிரம் நூலிற்குப் பொலிவும் பெருமையும் திகழச் செய்கின்றது என்பது அடியேனின் நம்பிக்கை. அணிந்துரை அருளிய முதுபெரும் புலவர் திருவாளர் பெ. இராமாநுஜ ரெட்டியார் எங்கள் குலத்துப் பிதாமகன் 4. அடியேனின் மணிவிழா மலரில் (1977) வாழ்த்திய பாடல்களில் ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/22&oldid=920831" இலிருந்து மீள்விக்கப்பட்டது