பக்கம்:வைணவ உரைவளம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 195 கொள்ளலாம்: அவனை உபாயமாக்கி ஐசுவரியகைவல் யார்த்திகளான வேறு புருஷார்த்தங்களையும் பெறலாம். (2) இரத்தினத்தின் மதிப்பை அறியாதவன் அற்ப விலைக்குவிற்பன்: மதிப்பறிந்தவன் உள்ள விலைக்கு விற்பன்: உத்தம அதிகாரி அதனை விற்பனை செய்யாமல் மார்பி லணிந்து அநுபவித்து மகிழ்வன். இங்ங்னமே எம்பெருமா னைக் கொண்டு ஐசுவரியம் போன்ற கீழான பலன்களைக் கொள்வாரும், அவனை மோட்சோபாயமாக்கிக் கொண்டு மோட்ச புருஷார்த்தத்தைக் கொள்வாரும், அவனை எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே' என்று தாமே அநுபவிப்பவர்களுமாக இருப்பார்கள். (3) இரத்தினத்தை இழந்தவன் கதறியழுவான். எம் பெருமானை இழந்தவனும் அப்படியே. இராமரத்தினத்தை இழந்த பரதன் அவையில் கதறியழுதானன்றோ? பழுதே பலபகலும் போயின என்று அஞ்சி அழுதேன்' இன்பத்தை இழந்த பாவியேன் என தாவி நில்லாதே! உன்னைக் காண்பான் நான் அலப்பு ஆய் ஆகாயத்தை நோக்கி யழுவன்' என்றிப்படியெல்லாம் கதறியழுவார்கள். (4) இரத்தின முடையவன் மார்பு நெறிப்பன். எம் பெருமானைக் கைக் கொண்டவர்களும் எனக்கு யாரும் நிகரில்லையே' மாறுளதோ இம் மண்ணின் மிசையோ9 எனக்கென்னினி வேண்டுவதே' இல்லையெனக் கெதிரே' என்று செருக்கிப் பேசுவார்கள். 15. முதல் திரு. 16 16. பெரு, திரு. 7;4 17. திருவாய் 5.8:4 18. இராமா. நூற். 47 19. திருவாய் 6.4;9 30. ωδιφ.. 6, 4:4 21. பெருத்தொகை-18, 88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/220&oldid=920832" இலிருந்து மீள்விக்கப்பட்டது