பக்கம்:வைணவ உரைவளம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98 வைணவ உரைவளம் பிரியாது தன்னடைந்தார் வருமானம் தவிர்க்கும் : தன் அடியார்க்கு ஏதேனும் அவமான முண்டானால் ஆனைத் தொழில்களும் செய்து அதனைப் போக்கியருள்பவன் எம்பெருமான். ஓர் இதிகாசம் : சூரிய வமிசத்து அரசர்களில் அம்பரீஷன் என்பான் ஒருவன்; இவன் பரமபகவத் பக்தன். இவனைப் பாதுகாக்க எம்பெருமான் தன் திருவாழியாழ் வானை எப்போதும் இவ்வரசனுடைய மாளிகையிலேயே கோயில் கொண்டிருக்கும்படி வைத்திருந்தான். இவன் பாகவதாராதன ரூபமாய் ஓராண்டுத் தலைக்கட்ட வேண்டியதான தவாதசி விரதமொன்றை அதுட்டித்து வந்தான். இந்த விரதம் முடிவாகும் துவாதசியன்று சிறப்பாக அந்தணர்கட்குத் தட்சிணை கொடுத்து அவர்க ளுடைய நியமனம் பெற்றுக் கொண்டு முதலுணவு (பாரணை) பண்ணப்புகும் அளவில் துர்வாச முனிவர் அதிதி பூசை பெற்றுக் கொள்ள அங்கு வந்து சேர்ந்தார். மிகச் சிறந்த தபோநிதியாகிய இந்த அதிதி எழுந்தருளி னதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி கொண்டு உபசாரங்களை விதிப்படி நடத்தினான். பின்னர் தாரணை கோஷ்டியில் கலந்து கொள்ளுமாறு வேண்டினான். முனிவரும் அதற் கிசைந்து மாத்யாஹ் நிக அதுட்டானங்களை நிறை வேற்றி வருகிறேன்" என்று கூறி யமுனைக்குச் சென்றார்; சென்றவர் அநுட்டானங்களில் மிக ஊன்றித் தாமதிக்கை யில் துவாகசித் திதி கழிந்து போகும் தருணம் வரவே, சங்கல்ப பூர்வமாக இந்த விரதத்தை அநுட்டித்து வந்த அரசன் துவாதசி திதி முடிவதற்கு முன்பு பாரணை செய்யாவிடில் விரதத்திற்குக் குறைவு வரும்; எழுந்தருளின அதிதியை அலட்சியம் செய்து பாரணை செய்தால் பெரும் பாவம் விளையும்; இங்ஙனம் தர்ம சங்கடமாக நேர்ந்து விட்டதே! இதற்கு என்ன செய்வோம்!' என்று மிக்க கவலை கொண்டான். வல்லவர்களான அந்தணர்களைக் கலந்து ஆலோசித்து அவர்கள் சொற்ப x தீர்த்த பாரணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/223&oldid=920835" இலிருந்து மீள்விக்கப்பட்டது