பக்கம்:வைணவ உரைவளம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 201 |அக்கு-எலும்பு; அதள்-தோள்; உடையார்உடையாராகிய சிவபிரான்; பக்கம்-அருகே; பண்பர் - சீலகுணம் உடையார்; தக்கதகுந்ததான; தாழ்சினை-தாழ்ந்த கிளை: வெள்ளிறா - வெள்ளிறா என்னும் மீனை: தாய்-தாய்க்கொக்கு.) திருக்குறுங்குடி விஷயமான திருமொழியிலுள்ள ஒரு பாசுரம். எம்பெருமானுக்கு ஆகாதாரில்லை என்கின் றார். நானே ஈசுவரன்' என்று அபிமானித்திருக்கும் ஒருவனுக்கு முகங் கொடுத்துக் கொண்டிருக்கின்றவன் அநுகூலராய்ச் சென்று கிட்டுகின்ற நமக்கு முகாந்திரம் சொல்ல வேணுமோ? என்பது உட்கருத்து. இதில் உள்ள இதிகாசம் : ஒருகாலத்தில் சிவபெருமான் தன்னை மதியாத தாருக வனத்து முனிவர்களுடைய கருவத்தைப் பங்கம் செய்யவும் அவர்தம் மனைவிமார் களின் கற்பு நிலையைச் சோதிக்கவும் கருதித் தான் ஒருவிட வடிவங்கொண்டு அவர் இல்லந்தோறும் சென்று பிச்சை கேட்கும் நிலையில் தன்னை நோக்கிக் காதல் கொண்ட அம்முனி பத்தினிகளின் கற்பு நிலையைக் கெடச் செய்ய, அது கண்டு பொறாமல் சீற்றம் கொண்ட அம்முனிவர்கள் அபிசார யாகமொன்று செய்து அவ் வோமத் தீயினின்று எழுந்த நாகங்கள், பூதங்கள், மான், புலி, முயல்கள், வெண்டலை முதலியவற்றைச் சிவனைக்கொன்று வரும்படி ஏவ, சிவபெருமான் தன்மீது பொங்கிவந்த நாகங்களை ஆபரணங்களாக்கிக் கொண்டான்; பூதங்களைக் கணங்க ளாகக்கொண்டான்; மானைக் சுையிலேந்திக்கொண்டான்; புலித்தோலை உரித்து ஆடையாகத் தரித்துக்கொண்டான். முயல்கனை முதுகிற் காலால் ஊன்றி வெண்டலையைக் கையால் பற்றிச் சிரமேல் அணிந்து இங்ங்னம் அவற்றை யெல்லாம் பயனிலவாகச் செய்து விட்டனன் என்பது கதை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/226&oldid=920838" இலிருந்து மீள்விக்கப்பட்டது