பக்கம்:வைணவ உரைவளம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 வைணவ உரைவளம் 9О தேனுகன் ஆவி போயுக அங்கோர் செழுந்திரள் பனங்கனி உதிர தானுகந் தெறிந்த தடங்கடல் வண்ணர் எண்ணிமுன் இடங்கொண்ட கோயில் வானகச் சோலை மரகதச் சாயல் மாமணிக் கல்லதர் கிறைந்து மானுகர் சாரல் மாலிருஞ் சோலை வணங்குவதும் வாமட நெஞ்சே! Fதேனுகன்-தேனு.காசுரன், ஆவி-உயிர்: போய் உக-தொலைந்து போவதற்காக; ஒர் செழு திரள் - அழகாகத் திரண்டிருந்த; தான் எறிந்து-அக் கழுதையைப் பனங் கனி மேலெறிந்து; மாமணிகல் அதர்-நீலப்பாறை வழிகளில் (புகுந்து); நிறைந்து - நிறைய இருந்து: நுகர் - மேயப்பெற்ற, சாரல்பக்கங்கள்) திருமாலிருஞ்சோலை விஷயமான திருமொழியில் ஒரு பாசுரம். திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வணங்கு தற்காகத் தன் நெஞ்சை வருமாறு பணிக்கின்றார் ஆழ்வார். தேனுகன் ஆவி......யுதிர : இதிலுள்ள இதிகாசம். கம்சனது ஏவுதலால் கழுதை வடிவம் கொண்டு காட்டுக் குள்ளே கண்ணபிரானை நலிவதற்காக வந்தவன் தேனுகன் என்னும் அசுரன். கண்ணபிரான் பலராமனோடும் இடைச் சிறுவர்களோடும் மாடு மேய்த்துக் கொண்டு, பழங்கள் அழகாக மிகுதியாய்ப் பழுத்து மணம் வீசிக்கொண்டிருந்த ஒரு பனங்காட்டை அடைந்து அப் பனம்பழங்களை விரும்பி உதிர்த்துக்கொண்டு வருகையில் அவ் வனத்துக்குத் தலைவ 3. பெரி. திரு. 9.3:7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/227&oldid=920839" இலிருந்து மீள்விக்கப்பட்டது