பக்கம்:வைணவ உரைவளம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 வைணவ உரைவளம்

  • சிலம்பியலாறுடைய திருமாலிருஞ் சோலை : சிலம்பு' என்று சொல்லையிட்டு வளர்க்கப்படுகின்ற ஆறு; நூபுர கங்கை’ என்று வடமொழிப் பெயர்பெறும். திருமால் உலகளந்த காலத்தில் மேலே சத்தியலோகத்திற் சென்ற அப் பெருமானது திருவடியைப் பிரமன் தன் கைக் கமண்டல நீரால் கழுவி விளக்க, அக் காற்சிலம்பினின்று தோன்றியதால் சிலம்பாறு' என்ற பெயராயிற்று. இனி, சிலம்பாறு’ என்பதற்குத் திருக்கண்ணபுரம் சுவாமி ரஸோக் தியாக ஒரு பொருள் படிப்பதுண்டு. ஆழ்வான் அருளிய சுந்தரபாஹ ஸ்வத்திலுள் ஒரு ஸ்லோகத்தை அடிப்படை யாகக்கொண்டு இப்பொருள் அமைகின்றது. கின்னரப் பெண்மணிகள் திருமாலிருஞ் சோலைத் தாழ்வரையில் வந்து நம்மாழ்வாரது திருவாய்மொழிப் பாசுரங்களை இசைபாடம் மரங்களும் இரங்கும் வகை மணிவண்ணவோ' என்று கூவின அவ்வாழ்வாரது பாசுரங்களைக் கேட்ட குன்றும் உருகிப் பெருகாநின்றது என்று அருளிச் செய்தமை யால் குன்றே உருகி ஆறாயிற்று என்ற காரணங்கொண்டு சிலம்பாறு என்னதாயிற்று' என்று அருளிச் செய்வர்,

எங்கள் எம்மிறை எம்பிரான்' : (அவதாரிசை). இது திருக்கோட்டியூர் என்ற திருப்பதி விஷயமான திருமொழி. மணிமுத்தா ஆற்றங்கரையிலுள்ள இந்தத் திருப்பதி முற் காலத்தில் கதம்ப முனிவரின் புண்ணிய ஆசிரமமாக இருந்தது; இந்த முனிவரின் சாபத்தினால் துட்டர் ஒருவரும் கிட்டவர முடியாமலும் இருந்தது. முன்பு இரணியன் மூவுலகங்களையும் அரசாண்டபோது தேவர் 5. Gt uff திரு 9 8:9 6. திருவாய். 6.5:9 7. பெரி. திரு. 9.10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/229&oldid=920841" இலிருந்து மீள்விக்கப்பட்டது