பக்கம்:வைணவ உரைவளம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 2 07 கேட்கைக்காக. இராமகிருஷ்ணாதி விபவாவதாரங்கள் அக்காலத்திலிருந்தவர்கள் யொழிந்தன; அந்தர்யாமியா யிருக்கும் இருப்பு பிரகலாதாழ்வான் போல்வார்க்குப் பயன் அளிக்கும். அர்ச்சாவதார நிலையொன்றே எமக்குப் பிழைப்பு. சம்சாரிகளின் முகங்கொடுக்கைக்காக அன்றோ இஃது ஏற்பட்டது? குருடர்க்கு ஏற்பட்ட இடத்திலே விழி கண்ணர் புகுரலாமோ? விழிகண்ணர்க்கு ஏற்பட்ட இடம் குருடர்க்கு உதவுமோ? ஆகையாலே எமக்கே அசாதாரண சேவியமாக வாய்த்தது திருக்கோட்டியூர் நிலை என் கின்றார். பதியே பரவித் தொழும் தொண்டர்களனை வரையும் எங்கள்' என்றதில் கூட்டிக்கொள்க. 94 காவல னிலங்கைக் கிறைகலங் கச்சரம் செலவுய்த்து, மற்றவன் ஏவலம்.தவிர்த் தான் என்னை யாளுடை எம்பிரான் காவலம்புவி மன்னர் வந்து வணங்க மாலுறை கின்றதிங்கென தேவர் வந்திறைஞ்சும் திருக்கோட்டி யூரானே' (காவலன்-நானே காப்பவன்' என்று அகங்காரம் கொண்டிருந்த கலங்க-முடியும் படியாக, சாம்" அம்பு, செலஉய்த்து- செலுத்தி: ஏவலம்அம்பு செலுத்தும் சாமர்த்தியத்தை; தவிர்த் தான்-தொலைத்தவனும்; நாவலம்-சம்புத் தீவிலுள்ள வந்து-தெரிந்து வந்து: வணங்க ஆச்சரியிக்க) திருக்கோட்டியூர் விஷயமான திருமொழியில் ஒரு பாசுரம். சர்வேசுவரன் ஒருவன் உளன் என்றும், அவனுக்கு 10. பெரி. திரு. 9. 10: 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/232&oldid=920845" இலிருந்து மீள்விக்கப்பட்டது