பக்கம்:வைணவ உரைவளம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 வைணவ உரைவளம் அடிமைப்பட்டு உய்தல் நம்முடைய இயல்பு என்றும் உணரப் பெறாமல் தானே சர்வ இரட்சகனாக அகஸ்கரித் திருந்த இராவணன் இன்றளவும் நாம் அநுபவியாதிருந்த அவமானம் இன்று அநுபவிக்கலாயிற்றே! இன்னமும் என்னவாகுமோ?' என்று மனந்தளும்பும்படியாக அவன் மீது அம்புகளைப் பொழிந்து அவனுடைய மிடுக்கைத் தவிர்த்தவனும், இப்படிப்பட்ட வீரச்செயலுக்கு என்னைத் தோற்பித்து அடிமை கொண்டருளினவனுமான எம்பெரு மான் திருக்கோட்டியூரான்' என்கின்றார். (நாவலம் புவிமன்னர்...1 உப்புக்கடல், கருப்புக்கடல், கள்ளுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், நீர்க் கடல் என்ற ஏழுகடலாலும் சூழப்பெற்ற ஏழு தீவுகளும் முறையே ஜம்பூத்வீபம், ப்லட்சத்வீபம், சால்மலி த்வீபம் குசத்வீபம், க்ரெளஞ்ச த்வீபம், சாகத்வீபம்,புஷ்கர த்வீபம் என்ற பெயர்களால் வழங்குகின்றன. இவற்றுள் ஜம்பு த்வீபம் மற்றஎல்லாத் தீவுகளுக்கும் நடுவில் உள்ளது. இதன் நடுவில் மேரு என்னும் பொன்மலையுள்ளது. இதனைச் சுற்றியுள்ள இளாவ்ருத வருஷத்தில் (ஒருநாடு) படைக்கப் பெற்றுள்ள நான்கு மலைகளைச் சுற்றி நாற்றிசையிலும் நான்கு மரங்கள் உள்ளன; அவற்றிலொன்றாகிய நாவல் மரம் ஜம்புத்வீபமென்று இத்தீவின் பெயர் வழங்குதற்குக் காரணமாயிற்று என்று புராணம் கூறும் (ஜம்பு-நாவல்) மற்றைத் தீவுகள் கர்மபலன் அநுபவத்திற்கே உரியவையா கையாலும், இத்தீவு பலன்களுக்குச் சாதனமான கருமங் களை அதுட்டித்தற்கு உரிய இடமாகையாலும் இத்தீவு ஒன்றே சிறப்புறும். இத்தீவில் நவம கண்டமான பாரத வருஷத்துக்கன்றோ இவ்வுரிமை உள்ளதென்னில்: ஆம், இத்தீவுக்குக் கண்டம் முக்கியமானவைபற்றி அச்சிறப்பு இத்தீவுக்கு உன்ளதாகச் சொல்லக் குறை இல்லை. இத்தீவில் மானிடப் பிறவி படைப்பது அரிய பெரிய தவங் களின் பயனாம் என்பர். அப்படிப்பட்ட தவங்களைச் செய்து இத்தீவில் பிறந்து அரசர்களாக வாழ்பவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/233&oldid=920846" இலிருந்து மீள்விக்கப்பட்டது