பக்கம்:வைணவ உரைவளம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 209 திருக்கோட்டியூரை வந்து வணங்காதிரார்கள்; அவர்கள் வணங்குவதைக் கண்ட இந்திராதிதேவர்கள் இவ்விடத்தில் தேவசந்நிதானம் உண்டென்று உணர்ந்து தாங்களும் வந்து இறைஞ்சுவார்களாம். பத்தாம் பத்து S)S "ஒரு கல் சுற்றம் : (அவதாரிகை) ஆழ்வாருக்கு இவ்விருள்தருமா ஞாலத்தில் இருப்புசகிக்க முடியாதாகித் (அஸ்ஹ்யமாகி) திருநாடு செல்ல விரைவு உண்டாயிற்று. எம்பெருமான் இவருக்கு இவ் விபூதியில் சில திருப்பதி களைக் காட்டி, இவர்தம் ஆசையை மறைத்திட, இவரும் திவ்விய தேசாநுபவத்தாலே களித்துப் பொழுது போக்கி நின்றார். இனி, பழைய ஆசையே இவருக்குத் தலை எடுத்தது; அஃதாவது இக் கொடு உலகினின்றும் நலமந்த மில்லாததோர் நாடாகிய பரமபதத்திற்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் கிளர்ந்தது. எம்பெருமான் இனி நம்முடைய எண்ணத்தைத் தலைக்கட்டியல்லது நில்லான்' என்ற உறுதியும் தோன்றிற்று. பயணம் புறப் படுவதாகவே பாரிப்புக்கொண்டார். பிறந்தகத்தில் நின்றும் புக்ககம் புறப்படுகின்ற பெண்பிள்ளை தான் நெடுநாள் வாழ்ந்த இடத்தில் தன்னோடு மிகவும் முகம் பழகியிருந்த மிக்க அன்புடைய சில பெண்பிள்ளைகளைச் சந்தித்து அவர்களிடம் பணிந்து, நங்காய் நான் போய், வருகின்றேன்; மாதே, நான் போப் வருகின்றேன்" என்று சொல்லி வரச் சில குறடுகள் ஏறியிறங்குமாபோல, இவ்வாழ்வாரும் தம் புக்கமாகிய பரமபதத்தின் பயணத்திற்குப் பூர்வாங்கமாகத் தமது மிக்க ஈடுபாட்டிற்கிடமான சில திருப்பதிகளிலே 1. பெரி. திரு. 10.1 வை.-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/234&oldid=920847" இலிருந்து மீள்விக்கப்பட்டது