பக்கம்:வைணவ உரைவளம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 2 i ! 97 இரக்க மின்றியெங் கோன்செய்த தீமை இம்மையே யெமக் கெய்திற்றுக் காணிர் பரக்க யாமின் றுரைத்தேன் இராவணன் பட்ட னன் இனி யாவர்க் குரைக்கோம் குரக்கு நாயகா காண்! இளங் கோவே? கோல வல்வி லிராம பிரானே! அரக்க ராடழைப் பாரில்லை நாங்கள் அஞ்சி னோந்தடம் பொங்கத்தம் பொங்கோ (இரக்கம்-ஈர நெஞ்சு; எங்கோன்-இராவணன்; தீமை-அபசாரம்; பரக்க-விரிவாக: குரக்கு நாயகர்-வாநர சேனாதிபதிகள்; இளங்கோஇளைய பெருமாளே ஆடு அழைப்பார்வெற்றியைச் சொல்லிக் கூவுவார்.; வாணர வீரர்களையும் இளைய பெருமாளையும் விளித்து இலங்கையசுரர்கள் தங்கள் தோல்வியும் இவர்கள் வெற்றியும் தோற்றச் சொல்லிக் கூத்தாடு கின்றனர். அரக்க ராட அழைப்பாரில்லை : இராக்கதரில் இனி ஆடுபோல் கூப்பிடக் கடவாரில்லை' என்று நஞ்சீயா நம் பிள்ளைக்குப் பொருள் பணிக்க, அதனை நம்பிள்ளை கேட்டு ஆடு என்று வெற்றிக்கும் வாசகமாதலால் இந்த இராக்கத சாதியில் வெற்றி சொல்வாரில்லை; (அதாவது) தோற்றோம் தோற்றோம் என்று தோல்வி சொல்ல வல்லார் உண்டேயொழிய வெற்றியைச் சொல்லிக்கொள்ள வல்லாரில்லை-என்று பொருள் கூறலாகாதோ?’ என்ன, கஞ்சீயரும் இதைக் கேட்டருளி இது பொருந்தும் பொருள்; இப்படியே சொல்லிக் கொள்ள அமையும்" என்று நியமித்தருளினராம். 3. பெரி. திரு. 10.2:1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/236&oldid=920849" இலிருந்து மீள்விக்கப்பட்டது