பக்கம்:வைணவ உரைவளம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 6 வைணவ உரைவளம் என்னில்: ஈசுவரனுக்கு இது கிடைத்ததற்க்கரியது. கிடைத் தல் என்பது தோற்றுவதற்காகவே இப்படி அருளிச் செய்யப் பெற்றது என்பர். நந்த கோபன் பிள்ளையாகப் பெறும்படி யான பாக்கியம் பெற்றவனே! என்றவாறு. இவனுடைய பிறப்பினாலே நந்தகோபனுக்கு ஏற்றம்: நந்தகோபனுக்குப் பிள்ளையாகப் பிறந்ததனால் இவனுக்கும் ஏற்றமன்றோ? என்று நம் ஆசார்யர்கள் நிர்வகிக்கிறபடி. எம்பெருமா னுடைய காரணமில்லாத அருளுக்கு இலக்காகப் பெற்ற ஏற்றம் நந்தன்' என்ற சொல்வடிவத்திலேயே விளங்கும். மெய்யாகவே இவனை மகனாகப் பெற்ற வசுதேவனை எடுத்துக் கொள்வோம்; வசுதேவன் என்றால் பணத்தால் விளங்குபவன் என்று பொருள். நந்தன் என்றால் ஆனந்தப் படுபவன் என்று பொருள். உலகில் பணக்காரனாக இருப்பவ னுக்கெல்லாம் ஆனந்தமுடையை இன்றியமையாததன்று; பணக்காரன் துக்கமுடையவனாகவும் ஏழை ஆனந்தமுடைய வனாகவும் இருக்கக்:காண்கின்றோம். வசுதேவன் கண்ண பிரானைப் பெறுதற்கு நெடுங்காலம் உபாயாதுஷ்டானம் செய்தவனாதலால் கண்ணனுடைய முக த்தைக் கண்ட மாத்திரத்தில் அவனுடைய நோன்பின் பலன் முற்றுப் பெற்றதாகி அவன்தானே பிள்ளையைத் தலைமேல் சுமந்துகொண்டுபோய் நந்தகோபலனிடத்தில் விட வேண்டியதாயிற்று. நந்த கோபன் ஒருவித உபாயாதுஷ் டானத்தையும் நெஞ் சிலும் நினையாதவனாயிருந்தவனா தலால் அவனுக்கு ஆனந்தமே நித்தியமாகச் சென்றது. அப்படிப் பட்டவனுக்குப் பிள்ளையாகப் பிறந்தது எம்பெரு மான்றனக்கு ஆனந்தம். பிறப்பே காரியமாக இருக்கும் சம்சாரிக்குப் பிறவாமை ஏற்றமாவது போல, பிறவாத பெருமானுக்கு பிறப்பு ஏற்றமாகின்றதென்னும் சுவைப் பொருளும் இங்கு உணரத்தக்கது. தனக்குக் கிடை யாததைப் பெறுகையன்றோ அவனவனுக்கு ஏற்றம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/241&oldid=920855" இலிருந்து மீள்விக்கப்பட்டது