பக்கம்:வைணவ உரைவளம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 2 1 7 பதினோ ராம் பத்து Τ Ο1 அன்னை முனிவதும் அன்றி லினகுரல் ஈர்வதும் மன்னு மறிகட லார்ப்ப தும்வளை சோர்வதும் பொன்னங் கலையல் அன்ன மென்னடைப் பூங்குழல் பினனை மணாளர் திறத்த மாயின. பின்னையே' (முனிவது-சிறிச் சொல்வது; ஈர்வதும்-இம்சிப் பதும்; மன்னும்-எப்போதும்; மறிகடல்அலை மடியப்பெற்ற கடல்: ஆர்ப்பதுஒலிப்பது; வளை சோர்வது-கைவளையல்கள் கழல்வது; பொன்கலை- பொன்னாடை யணிந்த; பின்னை-நப்பின்னை-மணாளt; நாயகர்) மகள்.பாசுரம்: "நான் பகவத் விஷயத்தில் கைவைப்பதற்கு முன்னர் தாய் என்னை ஒருசொல்லும் பொடிந்து சொல்வி வறியாள்; அன்றில் பறவையின் குரல் முன்பு கேட்கப்படும் போது செவிக்கு மிக இனிதாக இருந்தது; அப்போது கடலோசைதானும் காது கொடுத்துக் கேட்கக் கூடியதாக இருந்தது; உடலும்பூரித்து வளைகள் நெருக்குண்டிருந்தன. இப்போது அநுபவிக்கின்ற கஷ்டங்களில் ஒன்றும் நாம்முன்பு அநுபவித்ததே இல்லை. பின்னை மணாளரான எம்பெரு மான் திறத்தினிலே நெஞ்சு செலுத்தப்பெற்ற பின்பே தாய் சிறிச் சொல்லும் படியாகவும் அன்றிவின் குரல் நலியும் 1.பெரி, திரு. 11. 2: 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/242&oldid=920856" இலிருந்து மீள்விக்கப்பட்டது