பக்கம்:வைணவ உரைவளம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 | 8 வைணவ உரைவளம் படியாகவும் கடலோசைக்கு நோவுபடும்படியாகவும் கை வளைகள் கழலும்படியாகவும் பெற்றேன்' என்கின்றாள். வியாக்கியான ரீசூக்தி: பூர்வபரங்களுக்குச் சேர்த்தி போராதாகிலும் பிள்ளையுறங்கா வில்லிதாசர் பின்னை மணாளர் திறத்தோமான பின்பன்றோ இவை இப்படி யாயிற்று:சாமான்யனென்று இடுeடெல்லாம் இடவமையும் என்பாரைப்போலே அவரோடே ஒருசம்பந்தம் சொல்லி நலிகிறவை நலிந்தாலென்? என்பாராம்' என்பது. பாதக பதார்த்தங்களால் நோவுபட்டு வருந்திப் பேசுகின்ற இத்திருமொழியிலே இப்பாசுரத்திற்குப் பிள்ளை யுறங்கா வில்லிதாசர் அருளிச் செய்யும் கருத்து சந்தர்ப்பத் தோடு அவ்வளவு பொருந்தாதாயினும் சுவையுடைத்தா யிருக்கும். அவர் அருளிச் செய்யும் கருத்து என்? எனில்: அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும் மன்னுமறி கடலார்ப்பதும் வளை சோர்வதும் நாம் பின்னை மணாளர் திறத்திலே ஈடுபட்டிருக்கிறோமென்கிற காரணத்தில் தானே; அந்தக் காரணம் பற்றியாகில் அவை நமக்கு உத்தேச்யமே-என்பதாம். 'சாமான்யனென்று இடுமீடெல்லாம... என்பாரைப் போலே என்ற வியாக்கியானத் தொடரிலுள்ள ஐதிகம். முற் காலத்தில் திருமாலிருஞ்சோலையில் சாமானியரென்றும் சோழியரென்றும் இருவகுப்பினர் சந்நிதி கைங்கர்யாதி விஷயமாக அடிக்கடிப் பிணக்குண்பர்; அதனால் ஒருவர்க் கொருவர் கைகலந்து வலிதாக அடித்துக் கொள்ளுதலும் உண்டாம்; ஒரு சமயத்தில் மிக இருட்டான இடத்தில் (சந்நிதி வலம் வரும்போது) கைகலந்து போர்நடக்கையில் ஒருசோழியர் மற்றொரு சோழியரை வலிதாகப் புடைத்தார்; புடைப்பவருடைய மிடற்றோசையைக் கண்டிருந்த புடையுண்பவர் "ஐயோ! நான் சோழியனா யிற்றே! என்னை எதுக்கு அடிக்கின்றீர்!’ என்று கதற, அது கேட்ட அவர், அப்படியா? தெரியாது அடித்துவிட்டேன்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/243&oldid=920857" இலிருந்து மீள்விக்கப்பட்டது