பக்கம்:வைணவ உரைவளம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 22ዩ ஆழ்வார் அருளிச் செய்துள்ளதாகச் சில பெரியோர்கள் பணிப்பர். நம்மாழ்வாரும் திருவாசிரியத்தில் :ஈன்றோ ளிருக்க மணை நீராடி'3 என்று அருளிச் செய்திருத்தல் ஈண்டு நினைக்கத்தக்கது. திருநெடுந்தாண்டகம் 1Ο3 இந்திரக்கும் பிரமற்கும் முதல்வன் றன்னை இருநிலம்கால தீநீர் விண் பூதம் ஐந்தாய் செந்நிறத்த தமிழோசை வடசொல் லாகித் திசைநான்கு மாய்த்திங்கள் ஞாயி றாகி அந்தரத்தில தேவர்க்கும் அறிய லாகா அந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால மறவா தென்றும் வாழுதியேல வாழலாம் மடநெஞ்சமே! (முதல்வன் தன்னை-காரணபூதனாய்: கால் காற்று: செம்திறத்த-செவ்விய; திங்கள்சந்திரன்; ஞாயிறு - சூரியன்; அந்திமுடிவிலே, மந்திரத்தை - சர்வேசுவரனை; மறவாது - இடை விடாது; என்றும்-எப் பொழுதும்) எம்பெருமானைத் தாம் அநுபவித்ததில் மனநிறைவு பிறவாமையால் ஒருபோதும் தன்னைவிட்டு பிரியாத திரு வுள்ளத்தைத் தன்னோடு சேர்த்து அநுபவிக்குமாறு வேண்டுகின்றார் ஆழ்வார். செந்நிறத்த தமிழோசை வடசொல்லோடு : ஆரிய மொழி யாகிய சமஸ்கிருதத்தை முன்னே சொல்லித் தமிழைப் 3. திருவாசிரியம்-6 1. திருநெடுந். 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/246&oldid=920861" இலிருந்து மீள்விக்கப்பட்டது