பக்கம்:வைணவ உரைவளம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 வைணவ உரைவளம் (10) நீர் ஐவகைப் பட்டிருத்தல்போல என் பெருமா னும் ஐவகைப்பட்டிருப்பன். எங்ங்னேமென்னில்; (1)பூமிக் குள்ளே பதிந்து கிடக்கும் நீர்; (2) ஆவரண நீர்; (3) பாற் கடல்.நீர், (4) பெருக்காற்றுநீர், (5) தடாகங்களில் தேங்கும் நீர்-என ஐவகைப் பட்டிருக்கும். பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை என எம்பெருமானுடைய நிலைமை களும் ஐவகைப்படும். (11) நீரானது பரிசுத்தமாயினும் தான் இருக்கும் இடத்திற்குத் தக்கதாய்க் கொள்ளத் தக்கதாயும் விடத் தக்கதாயும் இருக்கும். அப்படியே தேவதாந்தரங்களில் அந்தர்யாமியான எம்பெருமான் விடத் தக்கவனாகவும் கூராழி வெண்சங்கேந்தின எம்பெருமான் கொள்ளத்தக்கவ னாகவும் உண்மை தெளிவாகும். (12) நீர் தோண் டத்தோண்டச் சுரக்கும்; கொள்ள மாளா வின்பவெள்ளங் கோதில் தந்திடும்".20 (13) நீர் தனக்கொரு பயனின்றியே பிறர்க்காகவே இருக்கும்; எம்பெருமானும் அவனைச் சேர்ந்தவையும் அவனை அடைந்தவர்க்காகவே இருக்கும். (14) நீர் தானாகப் பெய்யவேண்டுமேயன்றி ஒருவ ரால் வலிந்து பெய்விக்க முடியாதது: எம்பெருமான் இயல்பும் அபபடியே. (15) நீர் கடலிலிருந்து காளமேகம் வழியாக வந்தா லன்றி உயிர் வாழப் பயன்படுவதாகாது; எம்பெருமானும் சாத்திரங்களிலிருந்து ஆசாரியர் முகமாக வந்தே அடையத் தக்கவனாகின்றான். (16) வசிட்ட சண்டாள வேறுபாடின்றியே அனை வரும் ஓர் துறையிலே படிந்து குடைந்தாடலாம்படி இருக்கும் நீர்: எம்பெருமானும் நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே' என்றும், 10. டிெ, 4.7:2 11. ஷெ.6.10:16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/251&oldid=920873" இலிருந்து மீள்விக்கப்பட்டது