பக்கம்:வைணவ உரைவளம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 22? கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம்' என்றும் சொல்லுகின்றபடியே பெரியார் சிறியார் என்றும் வேற் துமையின்றி ஒக்க அடையலாம்படி இருப்பன். (17) நீர் சிறிது துவாரம் இருப்பினும் உள்புகுந்து விடும்: எம்பெருமானுக்குச் சிறிது வியாஜமே போதும். திருமா லிருஞ் சோலை மலையென்றேன்; என்னத், திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்' (18) தீர்த்தச் சிறப்புகளிலே நீருக்கு மகாத்மியம் அதிகம். எம்பெருமானுக்கும் கோயில் திருமலை பெரு மாள் கோயில் முதலான திருப்பதிகளிலே சிறப்புப் பொலியும். (19) தாபம் மிக்கவர்கள் நீரை முகத்திலே தெளித்துக் கொள்வது, முதுகில் கொட்டுவது, உள்ளில் இழிச்சுவது, படிந்து குடைந்தாடுவதுபோல் வாக்கினால் கருமந் தன்னால் மனத்தினால் சிரத்தை தன்னால், வேட்கை மீதுார வாங்கி' விழுங்குவார்கள் எம்பெருமானையும். (20) நீர் வேண்டியவன் துளி நாக்கு நனைக்கக் கிடைத் தால் போதுமென்பன்; கூராழி வெண்சங்கேந்திக் கொடி யேன்பால் வாராய் ஒருநாள் மண்ணும் விண்னும் மகிழவே' என்பர். (21) நீரில் சிறிய கல்லும் அமிழும்; பெரிய தெப்பமும் மிதக்கும்; எம்பெருமான் பக்கலிலும் பிரமாவாய் இழந்து போதல், இடைச்சியாய்ப் பெற்று விடுதல் செய்யக் காணா நின்றோம். நேரே, கடிகமலத்துள்ளிருந்தும் காண்கிலான் கண்ணனடிக் கமலந்தன்னை அயன்', 'மருவுநின் திரு 12. நான். திருவந். 47 18. திருவாய். 10.8:1 14. திருக்குறுந். 4. 15. திருவாய் 6.9:1 16. முதல், திருவந்-6ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/252&oldid=920874" இலிருந்து மீள்விக்கப்பட்டது