பக்கம்:வைணவ உரைவளம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 வைணவ உரைவளம் நெற்றியில் சுட்டியசைதர மணிவாயிடை முத்தம் தருத லும், உன்தன் தாதையைப் போலும் வடிவு கண்டு கொண் டுள்ளம் உள்குளிர, விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து வெகுளியாய் நின்றுரைக்கு மவ்வுரையும், திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ கங்கை யசோதை பெற்றாளே' என்பன அடைவே பிரமாணம். பகவத் குணங்களில் சிறுமா மணிசர் அமிழ்தலும், ஊன்மல்கி மோடு பருப்பார் வாய்க்கரையில் நிற்றலும்' கொள்க. 'உலகமேத்துவம் காரகத்தாய் : காரகம் என்கிற திவ்விய தேசமும் திருக்கச்சி மாநகரில் உலகளந்த பெருமாள் சந்நிதி யில் உள்ளது. மேகத்தின் இயல்பு போன்ற இயல்புடைய வனவாழும் இடமாதல்பற்றி இத்தலத்திற்குக் காரகம் என்று திருநாமமாயிற்று என்பர். எம்பெருமானுக்கு மேகத்தோடு ஒற்றுமை பல நிலைக ளால் உய்த்துணரத்தக்கது. (1) பெய்யவேண்டும் இடமளவுஞ் சென்று பெய்யும் மேகம்; எம்பெருமான் வந்தருளி யென்னெஞ்சிடங் கொண்ட வானவர் கொழுந்து' என்று ஆங்காங்குச் சென்று அதுக்கிரகிப்பன். (2) மின்னலுள்ள காலம் நீர் நிரம்பியிருக்கும் மேகம்: எம்பெருமானுக்கும் பிராட்டியோடு கூடியிருக்கும் காலத் தில் கிரு.பாரசம் விஞ்சியிருக்கும். இவள் சந்நிதியாலே காகம் தலை பெற்றது: அஃது இல்லாமையால் இராவணன் முடிந்தான்' என்ற முமுட்சுப் படியின் திவ்விய சூக்தியும் 也感肪°G邸函。 17. பெரு.திரு. 7:5 18. சிறுமாமணிசர் (திருவாய். 8. 10:2); ஊன்மல்கிமோடு பருப்பார் (டிெ.3:5.7) 19. திருவாய், 5.7:7 20. முமுட்சு-135

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/253&oldid=920876" இலிருந்து மீள்விக்கப்பட்டது