பக்கம்:வைணவ உரைவளம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 வைணவ உரைவளம் 蟹05 மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும் தன்னலர்ந்த கறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்ட என்னலனும் என்னிறையும் என்சிங்தையும் என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலினுடே புனலரங்க மூரென்று போயினாரே32 fமின்இலங்கு-மின்னல்போல: கரி.குவலயாபீடம்: கைத்தலம்-கை; தன் அலர்ந்த-தன் நிலத் திற் காட்டிலும்; தாழ்ந்து இலங்கு-தாழ்ந்து விளங்குகின்ற; மகரம்சேர் குழை-மகர குண்டலங்கள்: நலன்- அழகு, நிறைஅடக்கம்; சிந்தை-நெஞ்சு; வளை-வளை யல்கள்; ஆளும் கொண்டு-அடிமைகொண்டு; பொன் அலர்ந்த - பொன்போல; நறுபரிமளம் மிக்க, செருந்தி - சுரபுன்னை: பொழில்-சோலை, புனல்-நீர்வளம் மிக்க:

எம்பெருமான் தன்பக்கலிலுள்ள அனைத்தையும்

என்பக்கலிலுள்ள எல்லாவற்றையும் கொள்ளை கொண்டு போய் விட்டார்' என்கின்றாள் ஆழ்வார் நாயகி. பொன்போலே மலர்ந்து பரிமளம் மிக்கிருந்துள்ள வையுடைய சுரபுன்னைப் பொழிலினுடே உபயகாவேரி தடுவிலுள்ள திருவரங்கம் பெரியகோயில் நம்மூர் என்று சொல்லிக்கொண்டே போயினார்' என்கின்றாள். வியாக்கியான சூக்தி திருநகரில் நின்றும் கோயிலளவும் செல்லப்பொழிலாய்க் கிடந்ததோ என்னில்:ஒரு காளமேகம் வர்ஷித்துக் கொண்டும் போகா நின்றால் கண்டவிட, 83. திரு நெடுந் 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/257&oldid=920884" இலிருந்து மீள்விக்கப்பட்டது