பக்கம்:வைணவ உரைவளம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 233 மெங்கும் தளிரும் முறியுமாகாதோ?' என்று பட்டர் அருளிச் செய்வர்' என்று. முற்காலத்தில் விக்கிரம சோழன் என்பானொரு அரசன் தமிழில் ரசிகனாயிருந்தான்; அவனதுதிருச்சபையில் வைணவப் புலவர்களும் சைவசிகாமணிகளும் அடிக்கடிக் செல்வதுண்டு: ஒருகால் இரு சமயத்துப் புலவர்களும் கூடி யிருந்தபோது அவ்வரசன் தலைமகள் பிரிந்தபோது தலைவி இன்னாப்போடே சொல்லும் பாசுரம் எங்ங்னே இருக்கிறது? சொல்லுங்கள்; கேட்போம்' என்று இரு வகுப் பினரையும் கேட்டானாம். வைணவ வித்துவான் மின்னி லங்கு திருவுருவும் பெரியதோளும்' என்று தொடங்கி இப்பாசுரத்தை எடுத்துச் சொன்னார்: சைவ வித்துவான் :எலும்பும் சாம்பலும் உடையவன் இறைவன்' என்று தொடங்கி ஒரு செய்யுளைச் சொன்னான்; இரண்டையும் கேட்டு அவன் நெஞ்சில் கிலாய்ப்போடே சொல்லச் செய் தேயும் மின்னிலிங்கு திருவுருவும் நெஞ்சு பிணிப்புண்ணுமாறு சொன்னவளே உண்மையில் தலைமையுடையவள்: மற்றொருத்தி பிணந்தின்னி' என்றானாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/258&oldid=920886" இலிருந்து மீள்விக்கப்பட்டது