பக்கம்:வைணவ உரைவளம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய் மொழி முதல் பத்து 1 OG திருவாய்மொழியின் அவதாரிகை:மகாப்பிரவேசம்: "திருமகள் கேள்வன்-ஒன்றில் அசித்தைப் பற்றிப் பேசும் ஈட்டா சிரியர் முக்குணரூபமான் என்னுடைய இந்தப் பிரகிரு தியானது என்னால் உண்டுபண்ணப் பட்டது; ஒருவராலும் கடக்க முடியாதது; ஆயின் என்னையே சரணமாக அடை கின்றவர்கள் இதனைத் தாண்டுகின்றனர்' என்ற கீதை யின் சுலோகத்தைக் காட்டி, நான் பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்கப் போகாது; என்னையே கால் கட்டி அவிழ்த்துக் கொள்ள வேண்டும்’ என்று இறைவன் கூறு வதை எடுத்துக் காட்டுவர். இந்தத் கருத்தினையே ஆழ்வாரும், பொல்லாஆக்கையின் புணர்வினை அறுக்கல்அறா; சொல்லாய், யான் உன்னைச் சார்வதுஓர் சூழ்ச்சியே என்று அருளிச் செய்தார். ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவரால் அவிழ்க்கப்போவதில்லை; சர்வசக்தி. கர்மங்கட்குத் தகுதியாகப் பிணைத்த பிணையை அவனையே கால்கட்டி அவிழ்த்துக் கொள்ளும் இத்தனை காண்' என்றார் பிள்ளை திருகறையூர்.அரையர்.4 1. இதை 7; 14 1. திருவாய் 3: 2: 3 3. சர்வசக்தி-எல்லா ஆற்றல்களையுமுடையவன்; இறைவன். 4. அவதாரிகை-பக் 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/260&oldid=920892" இலிருந்து மீள்விக்கப்பட்டது