பக்கம்:வைணவ உரைவளம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 வைணவ உரைவளம் ዝO7 உயர்வற உயர்நல முடையவன் யவனவன் மயர்வற மதிகல மருளினன் யவனவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடரடி தொழுதெழென் மன்னே" (உயர்வுஆற- தன்னைப் பார்க்கிலும் உயர்ச்சி இல்லாதபடி, நலம்-கல்யாண குணங்கள்: யவனவன்-யவனொருவனோ; மயர்வு அற அஞ்ஞானம் நசிக்கும்படி; மதிநலம்-ஞானத் தையும் பக்தியையும்; அருளினன்- கிருபை பண்ணினவன்; அயர்வு அறும்- மறப்பு இல்லாத அமரர்கள்- நித்திய சூரிகள்: அதிபதி-தலைவன்:துயர்அறு-துக்கங்களைப் போக்குகின்ற; சுடர்-ஒளிமிக்க: தொழுதுவணங்கி; எழு-கடைத்தேறுக) ஆன்ம உபதேசத்தைக் கூறும் முதல் திருவாய் மொழியில் இது முதல் பாசுரம், இதில் ஆழ்வார், என் மனமே, தேவர்கள் முதலிய மற்றையோருடைய மேன் மைகள் முழுதும் இல்லையென்று கூறும்படி மேன்மேல் உயர்ந்து கொண்டே செல்லுகின்ற நற்குணங்களை யுடையவன் யா வ .ே னா, அவன் என்னிடத்துள்ள அறிவின்மையாவும் நீங்க, பக்தியின் நிலையை அடைந்த அறிவைத்தந்தான்; அந்த அறிவைத் தந்தவன் யாவனோ, அவன் மறதி என்பது சிறிதுமில்லாத நித்திய சூரிகட்குத் தலைவன்; அந்நித்திய சூரிகட்குத் தலைவன் யாவனோ, அவனுடைய எல்லாத் துன்பங்களையும் நீக்குகின்ற ஒளிபொருந்திய திருவடிகளைத் தொழுது பிறவிப் பெருங் கடலினின்று எழுவாய்' என்கின்றார். ச. இகுவாய்.11, 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/261&oldid=920893" இலிருந்து மீள்விக்கப்பட்டது