பக்கம்:வைணவ உரைவளம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 வைணவ உரைவளம் ΤΟ 8 கின்றனர் இருத்தனர் கிடந்தனர் திரிந்தனர், கின்றிலர் இருந்திலர் கிடந்திலர் தெரிந்திலர், என்றுமோர் இயல்வினர் எனங்னைவு அரியவர்; என்றுமோர் இயல்வொடு கின்றவெம் திடரே." [என்றும் -எப்போதும்; இயல்வினர்-இயற்கையை யுடையவர். இயல்வொடு-இயற்கையோடு; திடர்-திடமான பிரமாணத்தால் சொல்லப் பட்டவர்.) ஆன்ம உபதேசம்பற்றிய முதல் திருவாய்மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், நிற்றல், நில்லாமை; இருத்தல், இராமை; கிடத்தல், கிடவாமை; திரிதல், திரி யாமை; என ஒன்றிற்கொன்று மாறுபட்ட தொழில்களை உடையவராதலால், எப்பொழுதும் ஒரே தன்மையினை உடையவர் என நினைத்தற்கு அரியவர்: அப்படி நினைப்ப தற்கு அரியர் என்னும் தன்மை எப்பொழுதும் மாறு படாமல் ஒரே நிலையோடு கூடியிருக்கின்றவர்; நான்மறை களால் பரம்பொருள் இவனேயென்று உறுதி செய்யப்பட்ட திடத்தையுடையவர்; அவர் என் தலைவராவர்' என் கின்றார். "கின்றனர்... திரிந்திலர் : தொழில் செய்தல் செய் யாமைகளைக் காட்டுகின்ற இச்சொற்கள் அவற்றிற்கு நிலைக்களமான உயிர்களைக் காட்டி, அவ்வுயிர்கட்கு இறைவனை யொழியப் பிரிந்து நிற்றலாதல் தோன்றுத லாதல் இல்லாமையாலே, இறைவனளவும் காட்டுகின்றன. 10, டிெ. 1.1:8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/263&oldid=920897" இலிருந்து மீள்விக்கப்பட்டது