பக்கம்:வைணவ உரைவளம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 24t ஆகலின், இச்சொற்கள் இவற்றோடு கூடியிருக்கின்ற இறைவனையே காட்டுகின்றன. ஆயின், தொழில் செய்வ தற்காயின் இறைவன் திருவருள் வேண்டும்: தொழில் செய்யாதிருப்பதற்கு அவன் அருள் வேண்டுமோ?’ என்று எம்பாரைச் சிலர் கேட்க, அவர் சுவர்க்கத்தினின்றும் விழு. கின்ற திரிசங்குவைச் சக்திமான் நிற்கச் சொல்ல நிற்க் வேண்டிற்றுக் கண்டாயே! அப்படியே, நிவர்த்திக்கும் அவன் வேணுங்காண்’ என்று அருளிச் செய்தார்.

  • O9

விடுமின்' என்ற திருவாய்மொழியின் முன்னுரையி லிருந்து. இத்திருவாய்மொழி உலகிற்கு உபதேசம் செய்வ தாக அமைந்தது. முதல் திருவாய்மொழியில் தாம் அடைந்த இறைவனுடைய பரத்துவம் பற்றிய நுகர்ச்சி: எப்பொழுதும் நாள்திங்கள் ஆண்டுழி யூழிதொறும் அப்பொழுதைக் கப்பொழுதென் ஆரா அமுதமே.2 என்னும்படி, என்றும் புதியதாகவே இருக்கும். இந்த நுகர்ச்சியின் இன்பப் பெருக்கு தனியே நுகருமதன்றிக்கே இருந்தது; ஆதலால்; நாம் ஒருவருக்கொருவர் உணர்த்திக் கொண்டு நுகர்தற்கு ஆளாவார் யாவர்?’ என்று நினைந்து சம்சாரிகள்பக்கல் கண் வைத்தார்; தாம் இறைவன்பால் காதல் கரை புரண்டு நிற்பது போன்று அவர்கள் ஐம்புல வாசையில் அறிவு மயங்கி இருந்தார்கள்; கண்டதும், அவர்கள் கேட்டினை நீக்கியல்லது நிற்க வொண்ணாத நிலையினை அடைந்தார். என்னை? எனின்: வைஷ்ணவ II.TaXy.T3.5:4T 12. திருவாய் 1 2 வை.-16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/264&oldid=920899" இலிருந்து மீள்விக்கப்பட்டது