பக்கம்:வைணவ உரைவளம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 5 § 9 வாறே குற்றத்தைப் பொறுப்பிக்கும் அவள் முன்னாகப் பற்ற வேண்டும்' என்று கூறி நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலங்கழல் வணங்கி என்னா நின்றது கண்டீரே" என்று அருளிச் செய்தார் பட்டர்.

  • 15

'அஞ்சிறைய மடநாராய்' : இது மகள் பாசுரம். இது காமான தன்மையழிந்து ஒரு பிராட்டி நிலையை அடைந்த வராய், மகிழ்ச்சியால் கூறும் பாசுரம் போய் ஆற்றாமை யாலே20 கூறும் பாசுரமாய்ச் செல்லுகின்றது. இங்கு ஓர் ஐதிகம் : முற்காலத்தில் சிற்றறிஞன் ஒருவன், பற்றற்ற பரமஞானிகளும் போற்றத்தக்கனவாக இருக்கின்றன; உண்மைப் பொருளை உள்ளவாறு எடுத்துரைக்கின்றன என்று இத்திருவாய் மொழியளவும் பாடம் கேட்டு, இத்திருவாய்மொழி வந்த அளவில், இது காமுகர் வாக்கியமாக இருக்கின்றது என்று கை விட்டுப் போனானாம். வேதாந்தங்களில் விதிக்கப்படுகின்ற பகவத் காமமே இப்படிப்பட்ட பாசுரங்களாகப் பரிணமித்ததென்று அவன் அறிந்திலன், கருவிலே திரு இல்லாமையாலே-என்று நம் பிள்ளை வருந்திப் பேசுவர். வியூகத்தில் தூது : இத் திருவாய்மொழி வியூகத்தில் தூது விடுவது. கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும், அடல்ஆழிஅம்மானைக் கண்டக்கால்' என்பதால் வியூகத்தில் தூது என்பது அறியக் கிடக்கின்றது. தலைவனோடு கலந்து பிரிந்த ஒரு பிராட்டியின் நிலைமையை ஏறிட்டுக் கொண்ட ஆழ்வார் (அதாவது பராங்குச நாயகி) அவ்வெம்பெருமான் விரைந்து வரக் 19. திருவாய் 1.4. 20. ஆற்றாமை - பிரிவுத்துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/272&oldid=920918" இலிருந்து மீள்விக்கப்பட்டது