பக்கம்:வைணவ உரைவளம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 வைணவ உாைவளம் காணாமையாலும், அவனைப் பிரிந்து தான் ஆறியிருக்க மாட்டாமையாலும், தானே அவன் இருப்பிடம் நோக்கிச் செல்லுவதற்கு இயலாதபடி மேனி மெலிந்து கிடக்கையா லும் இராவணமாயையால்வரும் ஐயமும் இல்லாமையாலே கண்ணிற்கண்ட நாரை, குருகு வண்டு முதலிய பறவை களைத் துரது விடுகின்றார். இங்கே பட்டர் அருளிச்செய்வதொரு வார்த்தையுண்டு : சக்கரவர்த்தித் திருமகனார் (இராமபிரான்) திருவவதரித்த பின்பு வார ஜாதி வீறு பெற்றதுபோல, ஆழ்வார்கள் திருவவதரித்த பின்பு பட்சி ஜாதி வீறு பெற்றது' என்பது. இராமபிரான் முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்தது போல'2 ஆழ்வார்கள் அஞ்சிறைய புட்கள் தமை" ஆழியானுக்குத் தூது விடுகின்றார்கள் என்க. T 16 என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என்துதாய் என்செய்யும் உரைத்தக்கால்? இனக்குயில்காள்! நிர்அலிரே? முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ் குற்றேவல் முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ? விதியினமே22 |செய்யதாமரை-செந்தாமரை, கண்-திருக்கண் களையுடைய; என்செய்யும்-என்ன தீமை யைச்செய்யும்; இனக்குயில்கள்-கூட்டமான குயில்கள்; நீர்அiரேட(நெடுநாளாகப் பழகிப் போந்த) நீங்களல்வீர்களோ; முழுவினைபெரும் பாவம்; குற்றேவல்-அடிமைத் TZI.TGūū,T3Z5T2.2,3 22. திருவாய் 1.4:2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/273&oldid=920920" இலிருந்து மீள்விக்கப்பட்டது