பக்கம்:வைணவ உரைவளம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 251 தொழில்; முன்- முன்மை; இனம்-இன்னமும்; அகல்வதுவோ - விலகியிருப்பதோ, விதிமுறைமை) இப்பாசுரம் நம்மாழ்வார் அருளிச் செய்தது: மகள் பாசுரமாக நடப்பது; தூதுப் பாசுரமாக அமைந்தது; இது வியூகத்தில் தூது. சீதாப் பிராட்டியை ஆயிரக்கணக்கான வான ரங்கள் தேடுவதைப்போலவே, தன் கண்களில் கண்ட வற்றையெல்லாம் தூது போகுமாறு ஏவுகின்றாள் பராங்குசநாயகி. பறவைகளைத் தூதுவிடுத்த ஐதிகத்தைக் குறிப்பிடும் பட்டர், *சக்கரவர்த்தித் திருமகனார் திருவவதரித்த பின்பு வாணர ஜாதி வீறு பெற்றது போல ஆழ்வார்கள் திருவவதரித்த பின்பு பட்சி ஜாதி வீறு பெற்றது' என்று சுவையுடன் அருளிச் செய்வர். பிரிவாற்றாமையுடன் இருக்கும் பராங்குசநாயகி நெய்தல் நிலத்தில் இருக்கின்றாள். பிரிந்தார் இரங்குவது நெய்தல் நிலத்திலன்றோ? முன் பாசுரத்தில் நாரையைத் துரது போகுமாறு இரந்த தலைவி அங்குப் போனால் சொல்ல வேண்டிய செய்தியைச் சில குயில்கட்குச் சொல்லு கின்றாள். ஒருவரை அழைத்துவிட்டு மற்றொருவருக்குச் செய்தி சொல்லுகின்ற போக்கிலிருக்கும் ஆழ்வார் நாயகி யின் மிகுதியான கலக்கம் இதனால் நன்கு புலனாகும். இவள் பிரிந்த பொருளுக்கும் (எம்பெருமான்) நாட்டார் பிரிந்த பொளுக்கும் (சொத்து, பணம், பெண் முதலியவை) வேற்றுமையுள்ளதனால் பகவத் விஷயத்தின் ஏற்றம் தெளிவாகின்றது. பாசுரத்தில் ஆழ்வார் நாயகி கூட்டமாகச் செல்லு கின்ற குயில் காள்! நீங்கள் நெடுநாளாகப் பழகியவர் களல்லவா? செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடைய என்னுடைய பெருமானிடத்தில் எனக்குத் தூதாகிச் சென்று, நான் கூறுவதனைக் கூறின் குற்றம் யாதுண்டாம்? முற்பிறவியில் செய்த நிறைந்த பாவங்களால் திருவடிகளில் அண்மையிலிருந்து செய்யும் அடிமைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/274&oldid=920923" இலிருந்து மீள்விக்கப்பட்டது