பக்கம்:வைணவ உரைவளம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 253 என்று ஆண்டாளைப்போல் முலையாலணைக்க' என்று சொல்ல வேண்டியிருந்தும், திருவடிக் கீழ்க் குற்றேவல்' என்று சொல்லுகின்ற அழகு காண்மின்! இங்கே நம் பிள்ளை ஈடு: ; பிராமணர் பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லுமாப்போலே இவர் பிராட்டியானாலும் முலையா லணைக்க நினையார்; திருவடிகளில் அணையத் தேடும் அத்தனை' என்பதாக. வேதமோதிய அந்தணனுக்குப் பைத்தியம் பிடித்தாலும் வேதத்யயணமே சொல்லித் திரிதல்போல் ஆழ்வாருக்கு நிலைமை மாறினாலும் பாசுரம் பேசும் முறைமை மாத்திரம் மாறவில்லை என்று ஈண்டு அறியத்தக்கது. தேறியும் தேறாதும் மாயோன் திறத்தினளே இத்திருவே"2" என்பதும் ஈண்டு அநுசந்திக்க வுரியது. 117 என்னீர்மை கண்டிரங்கி இதுதகா தென்னாத என்னீல முகில்வண்ணர்க் கென்சொல்லியான் சொல்லுகேனோ? நன்னீர்மை யினியவர்கண் தங்காதென் றொருவாய்ச்சொல் நன்னீல அகன்றில் காள்! நல்குதிரோ? நல்கிரோ?26 (நீர்மை - இயல்பு: இரங்கி - மனம் இரங்கி; தகாது-தகுதியன்று; நீலமுகில்-நீலமேகம்; இனி - இனிமேல்; அவர்கண்-(பராங்குச நாயகியாகிய) அவளிடத்தில்; நல் நீர்மை நல்லுயிர் நல்குதிரோ, நல்கீரோ?-சொல்லு வீர்களோ? மாட்டீர்களோ) 25. திருவாய். 4.4:7 (தாய்ப் பாசுரம்) 26. திருவாய் 1.4:4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/276&oldid=920925" இலிருந்து மீள்விக்கப்பட்டது