பக்கம்:வைணவ உரைவளம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 வைணவ உரை வளம் மகள் பாசுரம் : பறவைகளைத் துரது விடும் நம்மாழ்வார் திருவாய்மொழியிலுள்ள பாசுரம். மகன்றில் பறவைகளை நோக்கிப் பராங்குச நாயகி பேசுகின்றாள்; நல்ல நீல நிறத்தினையுடைய மகன்றில் பறவைகளே! எனது தன்மை யைக் கண்டிருந்தும், இரங்கி, பிரிந்து தங்கியிருத்தல் தகாது என்று நினையாத நீலமுகில் போன்ற நிறத்தினை யுடைய என்னுடைய தலைவர்க்கு என்ன வார்த்தையினை நான் சொல்லப் போகின்றேன்; நல்ல உயிரானது இனி அத்தலைவியின் பொருட்டு அவளிடத்தில் தங்கியிரா தென்று ஒரு வார்த்தை சொல்லுதலைச் செய்வீர்களா? மாட்டீர்களா?' என்கின்றாள். (மகன்றில் என்பது நீர் வாழ் பறவை). என் கீர்மை கண்டிரங்கி : பட்டர் காலத்தில் ஒரு தமிழ்ப் புலவர் அவரிடத்தில் வந்து இப்பாசுரத்தின் முதலடி யில் ஓர் ஆட்சேபம் செய்தாராம்; அதாவது-இது பிரிந் திருக்கும் நிலைமையில் சொல்லுகின்ற பாசுரமேயன்றிக் கூடியிருக்கும் நிலைமையில் சொல்லுகின்ற பாசுரமன்றே: பிரிந்திருக்கும் காலத்தில் தலைவியின் தன்மைகளைத் தலைமகன் பிறர் சொல்லக் காதால் கேட்கலாமேயன்றிக் கண்ணால் நேரில் காண முடியாதன்றோ? ஆகவே, என் நீர்மை கேட்டிரங்கி இது தகாது என்னாத' என்று பாசுர மிருக்க வேண்டியது உசிதமாயிருக்க, என் நீர்மை கண்டிரங்கி' என்று எப்படிச் சொல்லலாம்? என்று மறுப்பு தெரிவித்தாராம். பட்டர் அதைக் கேட்டு, புலவரே! நன்கு வினவினிர்; புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு.2' என்ற திருக்குறளும், 27. குறள் - 187

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/277&oldid=920927" இலிருந்து மீள்விக்கப்பட்டது