பக்கம்:வைணவ உரைவளம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 வைணவ உரைவளம் நீங்கப் பெற்றேன்.(யான் இல்போது முடியப் புகாநின்றேன்). இனிமேல் உனக்கு நின் வாயலகில் இன் அடிசில் ஊட்டு வாரைத் தேடிக் கொள்வாய்' என்கின்றாள். சாயல்' என்பது சமுதாய சோபை; இதுவடமொழியில் லாவண்யம் எனப்படும். மாமை-அழகு; இதன் நிறம் மாந்தளிர் (குறுந், 331), அசோகந்தளிர் (கலி.15) ஆம்பலின் நார் உரித்த மெல்லிய தண்டு (நற் 6) இவற்றின் நிறத்தைப் போன்றது என்று கூறுவர். உள்ஊரும் கிங்தைநோய் எனக்கே தந்துளன் ஒளிவளையும் மாநிறமும் கொண்டார் இங்கே என்று திருமங்கை மன்னன் (திரு நெடுந்-23) கூறுவதையும் அவரே, மணிகழுநீர் மருங்கலரும் வயலாளி மணவாளன் பணி அறியேன், நீசென்று, என் பயலைநோய் உரையாயே என்று பகர்வதையும் (பெரி. திரு. 3.6:2)காண்க. அடிசில் என்பது, உண்பன தின்பன நக்குவன பருகுவனவற்றிற் கெல்லாம் பொதுப் பெயராகும். இப்பாசுரத்தில் ஒர் ஐதிகம் : பெரிய திருமலை நம்பி' என்னும் ஒர் ஆசிரியர் வெண்ணெய்க்காடும் பிள்ளை' என்ற கிருட்டிணன் திருமேனியை ஆராதித்து வந்தார்; அவர் திரு வாராதனம் சமர்ப்பிக்க ஆற்றலற்று அந்திமதசையை எய்தினார். ஒருநாள் பிள்ளைப் பெருமாள் சந்நிதி முன்பு தண்டன் சமர்ப்பித்து, திருத்தினரயை நீக்கச்செய்து, 31. இராமாநுசரின் ஆசிரியர்களில் ஒருவரான திரு மலை நம்பி வேறு; இவர் வேறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/281&oldid=920936" இலிருந்து மீள்விக்கப்பட்டது