பக்கம்:வைணவ உரைவளம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 வைணவ உரைவளம் கோவிந்தனே! பரமபதம் நிரம்பும்படியான நிறைந்த ஒளியையுடைய நீலமணி போன்ற நிறத்தையுடையவனே! மது என்னும் அரக்கனைக் கொன்றவனே! உன்னுடைய தேன்மலர்கின்ற திருவடித் தாமரைகளை பாவியான அடியேன் சேரும்படி திருவருள் புரிவாய்' என்பது பாசுரத் தின் பொருள். இந்தப் பாசுரத்தில் கூனே சிதைய உண்டைவில் நிறத்தில் தெறித்தாய்' என்பதற்கு இரண்டு வரலாறு களைக் கூறுவர் வியாக்கியாதாக்கள். (1)இராமாவதாரத்தில் : வனவாசத்திற்குக் காரணமான கூனியைச் சொல்லும்போது இளமையில் சுண்டுவில் கொண்டு திரிகின்ற காலத்தில் பெருமாள் லீலாரசம் அநுபவித்தார் என்பது ஒருவரலாறு. இப்போது ,கோவிந்தா என்பதற்குப் பூமியைக் காப்பவன் என்பது பொருள். இங்கு கூனே சிதைய-(மந்தரையின்) கூன் முன்னும்பின்னும் தள்ளுண்ணும்படியாக (நோவு அடையும்படியாக); உண்டைவில்-சுண்டு வில்லைக் கொண்டு; நிறத்தில்மருமத்திலே; தெறித்தாய்-எய்தாய். இவ்வாறு பொருள் கொள்ள வேண்டும். (2) கிருட்டிணாவதாரத்தில்: பலராமனும் கண்ணபிரா னும் வில்விழவுக்கென்று கம்சனால் அழைக்கப் பெற்று மதுரைக்குச் செல்லுங்கால், அரசவீதியில் சந்தனக் கிண்ணத்தைக் கையிலேந்தி வருகின்ற மங்கைப் பருவ முடைய கூனியைக் கண்டு நங்காய், யாருக்கு நீ இந்த பூச்சுக்கொண்டு செல்லுகின்றாய்?' என்று கண்ணன் பரிவுடன்கேட்க: கண்ணனின் திருக்கண்களால் மனம் கவரப் பட்ட அவள், அழகனே. நான நைகவக்கிரை என்பவள். கம்சனுடைய வேலையாள். சந்தனம் முதலிய பூச்சுகள் சித்தம் செய்வதற்காக நியமிக்கப் பெற்றவள்.’’ என்றாள். கண்ணன் எங்கள் திருமேனிக்கு ஏற்ற வெகு நேர்த்தியான இந்தப் பூச்சை எங்கட்குத் தருக" என்றவுடன் அவளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/283&oldid=920940" இலிருந்து மீள்விக்கப்பட்டது