பக்கம்:வைணவ உரைவளம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 261 அப்படியே அன்புடன் அதனைத் தன் திருமேனியில் பூசி மகிழ்ந்தான். அந்த மகிழ்ச்சிப் பெருக்கினாலே நடுவிரலும் முன்விரலும் கொண்ட தன் நுனிக் கையினாலே அவளது மேல்வாய்க்கட்டையைப் பிடித்து தன் திருவடிகளால் அவளது கால்களை அமுக்கி இழுத்துத் துரக்கிக் கோணல் நிமிர்த்து அவளை மகளிற் சிறந்த உருவினளாக்கியருளினன் என்பது கதை. இந்த இரண்டாவது சமாதானத்தை நம்பிள்ளை: அன்றிக்கே, தீம்பு சேருவது கிருஷ்ணனுக்கே யாகை யாலே போம் பழியெல்லாம் அமணன் தலையோடே என்னுமாப்போலே அவன் தலையிலே ஏறிட்டுச் சொல்லுதல்' என்று குறிப்பிடுவர். அதாவது-கூனே சிதைய உண்டை நிறத்தில் தெறித்தாய்' என்றுஇராமபிரா னுடைய சரிதையைச் சொல்லிவிட்டுக் குணக் கடலாகிய இராமபிரான் இப்படிப்பட்ட ஒரு தீம்பு செய்ததாகச் சொல்வதற்குத் திருவுள்ள மில்லாமல், 'பல்லாயிரம் இவ்வூரில் பிள்ளைகள் தீம்பு செய்வார் எல்லாம் உன்மேலன்றிப் போகாது" என்று யசோதைப் பிராட்டிவாக்கில் வைத்துப் பெரி யாழ்வார் பேசுவது போல ஊரில் நடைபெறும் தீம்புகளை யெல்லாம் தனக்கே கொள்ளப் பிறந்த கண்ணபிரான் மேலே இந்தத் தீம்பையும் ஏறிட்டு விடலாமென்று ஆழ்வார் திருவுள்ளம்பற்றிப் போலும் கோவிந்தா' என்று கிருஷ்ணனை நினைந்து பேசுகின்றார். போம்பழியெல்லாம் அமணன் தலையோடே" என்ற நம்பிள்ளை சூக்தியில் அடங்கிய வரலாறு இது : கள்ளன் ஒருவன் அந்தணன் ஒருவன் வீட்டில் சுன்னமிட்டான். 33. பெரியாழ். திரு. 2. 8: 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/284&oldid=920942" இலிருந்து மீள்விக்கப்பட்டது