பக்கம்:வைணவ உரைவளம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 வைணவ உரைவளம் அந்தச் சுவர் அன்றைக்குத்தான் வைக்கப்பெற்ற சரச் சுவராகையால், சுவரால் அமுக்கப்பெற்று கள்ளன் மாண்டு போனான். இந்நிலையில் கள்ளனின் உறவினர் வந்து அந்தணனைப் பழிதர வேண்டுமென்று நிர்ப்பந்தித்தனர். பின்னர் இரு திறத்தாரும் அரசன்பக்கல் சென்றனர். அந்த அரசனோ அறிவற்றவன்: மூர்க்கன். அவன் அந்தணனை நோக்கி, அந்தணா, நீ ஈரச்சுவர் வைத்ததனாலன்றோ அவன் முடிந்தான். ஆகையால் நீ பழிகொடுக்க வேண்டும்" என்றான். அந்தணன், ஐயா, இது எனக்குத் தெரியாது: சுவர் வைத்த பணியாளைக் கேட்கவேண்டும்' என்று பதிலிறுத்தான். பின்னர்ப் பணியாளை வரவழைத்து, 'நீ தானே ஈரச்சுவர் வைத்தாய்; நீதான் பழி தரவேண்டும்' என்று சொல்ல, அவனும், தண்ணிர் விடுகின்றவன் அதிக மாக விட்டிட்டான்; நான் இதற்குப் பொறுப்பல்லன்' எனத் தப்பித்துக் கொண்டான். பின்னர்த் தண்ணிர்விட்ட வனை அழைத்து விசாரித்தபோது அவன், குசவன் பெரும்பானையைத் தந்தான்; அதனால் நீர் அதிகமாயிற்று; நான் என்ன செய்வேன்?' என்று கூறி நழுவினான். குசவன் அழைத்து விசாரிக்கப் பெற்றான். அவனும், என் னால் வந்ததன்று; நான் பானையைச் சிறிதாகவே செய்ய நினைத்தேன்; அதனைச் செய்து கொண்டிருந்தபோது ஒரு வேசி போகவரத் திரிந்தாள்; ஏன் கவனம் கலைந்தது. அவளைப் பார்க்கின்ற பராக்கிலே பானை பெருத்து விட்டது. நானென்ன செய்வேன்?' என்று மறுமொழி கூற, பிறகு தாசியை அழைத்து விசாரிக்கும்போது, அவளும், :என்னால் வந்ததன்று; வண்ணான் என் சேலையை விரைவில் தராமையாலே நான் போகவரத் திரிந்தேன்' எனப் பதில் கூறிவிட்டாள். பிறகு வண்ணான் அழைத்து விசாரிக்கப் பெற்றான். அவனும், ஐயனே, நான் இதற்குப் பொறுப்பல்லேன்; துணிதுவைக்கும் துறையிலே கல்லின் மீது ஒர் அமணன் (திகம்பர சாமி) உட்கார்ந்திருந்தான். எவ்வளவு உரப்பியும் அவன் எழுந்து செல்லவில்லை; பிறகு அவனாகவே எழுந்து சென்ற பிறகு சேலையைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/285&oldid=920944" இலிருந்து மீள்விக்கப்பட்டது