பக்கம்:வைணவ உரைவளம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 265 என்று இறைவனுக்கே உரிய திருத்துழாயோடு அதற்கு வேறுபட்ட பூக்களையும் ஒரு சேர எடுத்துத் திருமங்கை மன்னன் அருளிச் செய்தது கண்டீரே! இதனால் இறைவன் பொருளில் ஏற்றத் தாழ்வு பார்ப்பதின்று என்பது விளங்குமே! மற்றும், பிரகிருதி சம்பந்தமில்லாத பொருன் தான் வேண்டுமென்று இருந்தா லாகில் புள்ளாய் ஒரேன முமாய் அவதரிப்பானோ? வைகுண்டத்திலிரானோ?" என்று அருளிச் செய்தாராம். பின்னர் நஞ்சீயர் வராக புராணம் பார்த்துக் கொண்டு வரும்போது வேராக நாயனார்க்கு முத்தக்காசை (கோரைக் கிழங்கு) அமுது செய்விப்பது என்று அதில் கூறப்பெற்றிருத்தலைக் கண்டதும், இஃது என்ன மெய்ப் பாடுதான்!” என்று மிகவும் ஈடுபட்டதாகவும் வரலாறு. 122 அமுதம் அமரர்கட் கீந்த நிமிர்சுடர் ஆழி நெடுமால் அமுதிலும் ஆற்ற இனியன் கிமிர்திரை நீள்கட லானே.3' (அமரர்கள்-தேவர்கள்: ஈந்த-கொடுத்த; நிமிர் சுடர்-வளர்க்கின்ற ஒளி: ஆழி-சக்கரம்; நிமிர் திரை-அலை எறிகின்ற; நீள்கடல்விசாலமான கடல்; அமுதிலும்-அமுதத்தை விட, ஆற்ற இனியன்-மிக்க இனிமையுடை யவன்; எம்பெருமான் ஆராதனைக்கு எளியவன் என்று கூறும் திருவாய்மொழியில் இஃது ஒரு பாசுரம். இதில் ஆழ்வார்: 37. திருவாய்.16:6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/288&oldid=920949" இலிருந்து மீள்விக்கப்பட்டது