பக்கம்:வைணவ உரைவளம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 267 தொலைவிலுள்ள வன்; அணியன் - அருகில் உள்ளவன்; எவர்க்கும்-எப்படிப் பட்ட ஞானி களுக்கும்; சிந்தை-மனம்: கோசரம் அல்லன் -எட்டாதவன்; தூயன்-பரிசுத்தன் துயக் கன்-சந்தேக ஞான முடையவன்; மயக்கன்விபரீத ஞான முடையவன்; தோள் இணைஇரண்டு தோள்கள்) இப்பாசுரம் நம்மாழ்வார் அருளிச் செய்தது; திருவாய் மொழியிலுள்ளது. இத் திருவாய்மொழி ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகையைப் பேசுவது. ஆழ்வா ருடைய திருமுடியிலே வீற்றிருக்க வேண்டும் என்று நினைத்த எம்பெருமான், பார்த்தனுக்குத் திவ்வியமான கண்களைக் கொடுத்து உலகமே உருவமாக இருக்கும் தனது தன்மையைக் காட்டியது போன்று, இவ்வாழ்வார்க் கும் தன்னை அநுபவிக்கைக்கு ஈடான விடாயைப் பிறப் பித்துப் (பக்தி ரூபாபந்ந ஞானத்தை விளங்கச் செய்து) பரமபதத்தில் உள்ளாரோடு பரிமாறுவது போன்று' பரிமாறக் கோரித் தன்னை அநுபவிக்கின்றான். ஆழ்வாருடைய திருமுடியிலே வந்து வீற்றிருக்க வேண்டும் என நினைத்த எம்பெருமான் முதலடியிலே அது செய்தால், நிதிகண்ட பிறவி வறியவன்போலே மகிழ்ச்சிப் 41. அதாவது, பிராட்டிமாரோடு பரிமாறுவதுதேவியர் என்னும் முறையாலே; திருவடியோடு பரிமாறுவது-வாகனம் என்னும் முறையாலே; திருவனந்தாழ்வானோடு பரிமாறுவது-படுக்கை என்னும் முறையாலே. இப்படி அவர்களோடு ஒரே முறையாலே பரிமாறும் பரிமாற்றங்களெல் லாம் இவர் ஒருவரோடு பரிமாறுகின்றான் (நித்திய சூரிகள் எல்லார் பக்கலிலும் பண்ணும் விருப் பத்தை ஆழ்வார் பக்கலில் பண்ணா நின்றான் என்பதாம்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/290&oldid=920955" இலிருந்து மீள்விக்கப்பட்டது