பக்கம்:வைணவ உரைவளம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 வைணவ உரைவளம் பின்னர், முன்னர் வினாவை எழுப்பிய சுவாமியை நோக்கி வேறுபாடு கண்டீரோ? யாருக்கு மரியாதை தர வேண்டும்? நீரே சொல்லும்' என்ன, அவரும் வியப் பெய்திப் போனார். துரயன் துயக்கன் மயக்கன்' என்ற இடத்திற்கு இஃது ஏற்ற விளக்கம் ஆகும். 1 24 கண்ணுள் ளேகிற்கும் காதன்மை யால்தொழில், எண்ணி லும்வரும் என்னினி வேண்டுவம், மண்ணும் நீரும் எரியும்கல் வாயுவும் விண்ணு மாய்விரி யும்எம் பிரானையே?42 (கண்ணுள்ளே நிற்கும்-நான் காணும்படியாக இருப்பவன்; காதன்மையால் - பக்தியோடு (பிரிவில் தரிக்கமாட்டாத பக்தி): தொழில்தொழுதால்: எண்ணிலும்-ஒன்று, இரண்டு என்று எண்ணினாலும்; என் இனி வேண்டுவம் -இனிமேல் என்ன குறை; விரியும்-பரவி யிருக்கும்; எம்பிரானை-எம்பெருமானை.) இது நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம். ஈசுவரன் காரணமின்றிச் செய்யும் உபகாரத்தைப் பேசும் திருவாய்மொழியில் வருவது. ஐம்பெரும் பூதங்களின் உருவமாய் விகிகின்ற எம்பெருமான், பரம பக்தியோடு வணங்கினால் வணங்குகின்றவர்களுடைய கண்களில் நிற்பான்; ஒன்று இரண்டு என்பன முதலாக எண்ணுமிடத் தும் வருவான்; இறைவன் தன்மை இதுவான பின்னர் நாம் 42. திருவாய். 1.1012

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/293&oldid=920962" இலிருந்து மீள்விக்கப்பட்டது