பக்கம்:வைணவ உரைவளம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 6ô616RT6U 2–68)}6U5# UD நன் ஞானமுடையாருக்கு இதுவே பொருள்' என்று தோன்றும்; கேவலம் கிரியாமாத்திரத்திற்கே பலத்தைக் கொடுக்கும் ஆற்றலுள்ளது" என்று இருப்பார்க்கு இப் பொருள் பொருத்தமன்று' என்று தோன்றும். இரண்டாம் பத்து T|25 ஏறனைப் பூவனைப் பூமகள் தன்னை வேறின்றி விண்தொழத் தன்னுள் வைத்து மேறன்னை மீதிட நிமிர்ந்துமண் கொண்ட மாறனின் மிக்குமோர் தேவும் உளதே' |ஏறு.இடபம்; அதனையுடையவன் ஏறன்-சிவன்; பூவன்-பூவைப் பிறப்பிடமாக உடையவன் நான்முகன்: விண்தொழ - விண்ணவர்கள் தொழ; விண்-இடவாகு பெயர்; மேல் தன்னை-மேலுலகத்தை; மீதிட-மேலிடும் படி; நிமிர்ந்து-வளர்ந்து, மண்-பூமி: மால் -திருமால்) இப்பாசுரம் திருமாவின் பரத்துவத்தை அவதாரத்தில் எடுத்து காட்டுவதாக அமைந்த திருவாய்மொழியிலுள்ளது. இதில் ஆழ்வார், இடப ஊர்தியையுடைய சிவனையும், தாமரை மலரில் பிறந்த நான்முகனையும், தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியாரையும் வேறுபாடின்றி அயர்வறு அமரர்கள் தொழும்படி தனது திருமேனியில் வைத்து, மேலேயுள்ள உலகங்களுக்கெல்லாம் மேலே செல்லும்படி வளர்ந்து உலகத்தை அளந்து கொண்ட அறப் பெரிய தெய்வத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகக் கூறத் தக்க வேறு தெய்வமும் உளதோ? இல்லை' என்கின்றார். 1. திருவாய். 2. 3: 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/295&oldid=920966" இலிருந்து மீள்விக்கப்பட்டது