பக்கம்:வைணவ உரைவளம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 273 மூவரையும் திருமேனியில் வைத்திருக்கும் நிலை திருமாலின் பரத்துவ நிலையாகும். அடியும்படிகடப்ப தோள் திசைமேல் செல்ல, முடியும் விசும்பு அளந்த' (முதல் திருவந்.17) திரிவிக்கிரம அவதாரத்தில் பரத்துவ நிலை பளிச்சிடுவதைக் கண்டு மகிழலாம். செளசீல்யத்தாலும், மூவடியால் உலகங்களையெல் லாம் அளத்தலாகிய அதிமானுஷ்ய சேஷ்டி தங்களாலும் இவனே முழுமுதற் கடவுள் என்று தெரிவித்தபடி. திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்கின் செங்கமல இரண்டடியால் மூவுலகும் இருள்தீர நடந்தனையே." இங்கு இருள்தீர என்ற தன் பொருள் ஊன்றி நோக்கி மகிழத் தக்கது. எல்லார் தலைகளிலும் காலை வைத்த வனை இறைவன் என்னவோ? இவன் காலிலே துகை யுண்டவர்களை இறையவர் என்னவோ?’ என்கின்றார். இருள்-பரம்பொருள் அவனோ? பிறரோ? என்று ஐயுறும் அஞ்ஞானம். விண்தொழ வேறின்றித் தன்னுள் வைத்து.வேறு பொருள்களிலும் மனத்தைச் செலுத்துகின்ற பிரமன் சிவன் இவர்கட்கும் வேறிடத்தை மனத்தைச் செலுத்தாத பெரிய பிராட்டியாருக்கும் ஒக்க முகங் கொடுத்து வைக்கின்ற சீல குணத்தை நினைத்து விண்ணவர்கள் தொழ நிற்பார்கள். 2 செள சீலயம் - சீலகுணம். பூரீவைகுண்டத்தைக் கலவிருக்கையாக உடையவன், அங்கு நின்றும் சம்சாரி சேதநர் நின்றவிடத்தே வந்து அவதரித்து எளியனா மிடத்து சிறியாரளவிலே நம்மைத் தாழவிட்டோமே!" என்று தன் திருவுள்ளத்திலுமின்றியிருத்தல். 3. சிலப், மதுரைக். ஆய்ச்சியகுரவை - முன்னிலைப் பரவல்.3 வை.-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/296&oldid=920967" இலிருந்து மீள்விக்கப்பட்டது