பக்கம்:வைணவ உரைவளம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 275 இலிங்கம் கிடைத்தது. இந்த இலிங்கத்தைத் திருக் காளத்தி அருகில் ஒரு சிற்றுாரில் பிரதிட்டை செய்து பக்தி செலுத்தி வந்தார். வரதராசருக்குத் திருக்கச்சி நம்பி போல வேங்கடநாதனுக்குத் திருமலை நம்பி என்பதை நன்கறிந்த இராமாநுசர் அவரைக்கொண்டு கோவிந்தரைத் திருத்த நினைத்தார். இராமநுசரின் கட்டளைப்படி திருக் காளத்தி சென்று வழக்கமாகக் கோவிந்தர் நீராடவும் பூக் கொய்யவும் வந்து கொண்டிருந்த குளத்தின் கரையில் போய்க் காத்துக்கொண்டிருந்தார் தம் சீடர்களுடன். கோவிந்தர் பூப்பறிக்கும் இடத்தில் தம் சீடர்கட்கு இப் பாசுரத்தின் சிறப்புப் பொருளை அழகாக உபதேசித்தருளி னார். பூப் பறித்துக்கொண்டே இவற்றைச் செவிமடுத்த கோவிந்தர், “பூவும் பூசனையும் தகுமே?” என்ற அடியின் பொருள் காதில் பட்டதும், தகாது தகாது” என்று தாம் விடை கூறிக்கொண்டே பூக்குடலையை விட் டெறிந்து திருமலை நம்பிகளின் திருப்பாதத்தில் வந்து சேர்ந்தார். பின்னர் கோவிந்தரை இராமாநுசரிடம் போகு மாறு கட்டளையிட்டுத் தாம் திருமலைக்குத் திரும்பி விட்டார். கோவிந்தர் இராமாநுசரைத் திருவரங்கத்தில் சந்தித்து இராமாதுசரிடம் திரிதண்டமும் காவியாடையும் பெற்றுத் துறவியானார். கோவிந்த பட்டரைக் கோவிந்தப் பெருமாள் என்று குறிப்பிட்டனர், திரு அரங்கத்துப் பாகவதர்கள். 12ア ஒத்தார்மிக் காரை இலையாய் மாமாயா, ஒத்தாயெப் பொருட்கு முயிராய்,என் னைப்பெற்ற, அத்தாயாய்த் தந்தையா யறியாதென அறிவித்த அத்தா, செய்தன அடியே னறியேனே." 5. திருவாய். 2.3:2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/298&oldid=920971" இலிருந்து மீள்விக்கப்பட்டது