பக்கம்:வைணவ உரைவளம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 வைணவ உரைவளம் (ஒத்தார்-சமானமானவர்கள்; மிக்கார்-மேற் பட்டவர்கள்: ஒத்தாய்-ஒப்பாக அவதரித்த வன்; அத்தா-மகோப காரகனான வன்ே.) இது நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம், அடியார் குழாத்தைக் கூடும் ஆசையுற்று உரைக்கும் திருவாய்மொழிப் பாசுரத்தில் ஒன்று. இதில் ஆழ்வார். :ஒத்தவர்களும் உயர்ந்தவர்களும் இல்லாத மிகப் பெரிய ஆச்சரியமான குணங்களையும் செயல்களையு முடைய வனே! அவ்வப் பொருள்கட்குத் தக்க நிலைகளை யுடையவ: னாகி வந்து அவதரித்தவனே! சுவாமியே! என்னுடைய உயிராகி, என்னைப் பெற்ற அந்தத் தாயாகித் தந்தையு மாகி, அறியாதனவற்றை யெல்லாம் அறியச் செய்து நீ செய்த காரியங்களை அறியேன்' என்கின்றார். அகன்ற நம்மை அவன் திருவடிகளில் சேர விட்டது. நெஞ்சு என்றாலும், அந்த நெஞ்சையும் இசைவித்த சர்வேசுவரனைக் கொண்டாடும் இந்தப் பாசுரத்தில் ஓர் ஐதிகம் : எம்பெருமானாருடைய காலட்சேப. கோஷ்டியிலே இப்பாசுரம் வந்த அளவில், இவ் வான்மா வுக்கு முதல் குரு யார்?' என்று ஒரு வினா எழுந்தது; அவன் குழுமி யிருந்த முதலிகளில் (பெரியோர்கள்) சிலர் ஆசாரியன்' என்றார்கள்; மற்றும் சிலர் *ஆசாரிய பூரிபாதத்திலே கொண்டு சேர்த்த பூரீவைஷ்ணவன் للاسا (قتة لوي முதல் குரு' என்றார்கள் முடிவில் எம்பார் அருளிச் செய்த தாவது: ' :இசைவித்து என்னை உன் தாள் இணைக் கீழ் இருத்தும் அம்மானே' என்று ஆழ்வாரே அருளிச் செய்கை ாைலே, அகவாயில் இருந்து இசைவித்த சர்வேசுவரனே முதல் குரு ஆசாரியன் அழைத்தாலும், ஒரு ரீவைஷ்ண வன் அழைத்தாலும் இவன் மாட்டேனென்று சொல்லி ஒட்டால் செய்யலாவதில்லை; அப்படிச் செய்யாமல் இசைவித்தது சர்வேசுவரனுடைய கிருத்திய மிறே" என்பதாக, سسسس----سمصسّسسسسسسسس 6. திருவாய். 5.8:9.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/299&oldid=920973" இலிருந்து மீள்விக்கப்பட்டது