பக்கம்:வைணவ உரைவளம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 279 ஆடியாடி’ என்றது தன் மகளின் சேட்டைகளைச் சொன்னபடி. எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளுகின்ற (திருவாய் (3.5:1) சேட்டைகள் உண்டல்லவா? அவற்றைச் சொன்னவாறு நெஞ்சு நீர்ப் பண்டமாக உருகுகின்றபடி சொல்லுகிறது அகங் கரைந்து' என்று. அப்படி நெஞ்சு நீர்ப்பண்டமாக உருகி நிற்கும்போது ஆற்றாமையாலே கூப்பிடுகின்ற கூப்பீடு அழகியதொரு இசையாகத் தலைக்கட்டி யிருப்பதாலே * இசைப்பாடிப் பாடி என்றது. ஆயின் கூப்பீட்டைப் பாட்டு என்னலாமோ? எனின்: ஆற்றாமையாலே துடித்த துடிப்பு ஆடலானாற்போலே பண்ணை வென்ற இன்சொல் மங்கை' (திருச்சந்த-105) யாதலின் ஆற்றாமையாலே கூப்பிட்ட கூப்பீடு பாட்டாய் விழா நின்றது, பாடிப் பாடின என்ற அடுக்கு, முதல் கூப்பீடு போலன்றி, இரண்டாம் கூப்பீடு தளர்ந்திருத்தலையும் தெரிவிக்கும். அகங் கரைந்து' என்று சொன்னபடி உருகின மனத் தத்துவமானது இசையாய் வழிந்தது போக எஞ்சி நின்ற பகுதி கண்ணிராய் வழிந்தோடுகையாலே கண்ணிர் மல்கி எனப் பட்டது. எங்கும் நாடி நாடி" என்பதால் திக்குகள் தோறும், கண்களைச் சுழல விட்டுப் பார்த்தபடியே இகுக் கின்றாள் என்பது தெரிவிக்கப்பெறுகின்றது. எம்பெருமான் ஆபத்தில் வந்து உதவத் தவறமாட்டா னாகையாலே கிடீரென்று ஓடிவந்தே தீருவேன் என்று அறுதியிட்டுச் சுற்றிலும் பார்த்தபடியே இருக்கின்றாள். பராசர பட்டர் இந்த அடியை உபந்யசிக்கும்போது பராங்குசநாயகி தன் சேலையையும் உதறியுதறிப் பார்க்கிறாள் காணும்' என்று அருளிச் செய்வாராம். இதற்குக் கருத்து என் எனில்: ஆழ்வார் : கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே' (திருவாய் 1.9:4) என்று அருளிச் செய் திருக்கையாலே அதனை அடியொற்றிய ரசோக்தி இது. இந்த ரசோக்தி அநுபவித்து மகிழத் தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/302&oldid=920983" இலிருந்து மீள்விக்கப்பட்டது