பக்கம்:வைணவ உரைவளம்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 29 மனத்தின்கண் வந்து பிரிதலின்றி நிலை பெற்று நின்று தனக்கே நான் உரியனாம்படி என்னை ஏற்றுக் கொள்ளு மிதுவே எனக்குத் தகுதியாகக் கண்ணனிடத்தில் யான் விரும்பிக் கொள்ளும் பயனாகும்' என்கின்றார். ஆட்செய், எனக்கு ஆட்செய், எனக்கே ஆட்செய், எக்காலத்தும் எனக்கே ஆட்செய்-என்று பிரித்துரைத்து கவிதை யநுபவத்தின் கொடுமுடிக்கு இட்டுச் சென்று பக்திச் சுவையின் பேரின்பத்தைக் காண்க. என்னை நியமித்துக் கொண்டு என் நெஞ்சினுள்ளே படுகாடு கிடக்க வேண்டும்; நிலாத் தென்றல், சந்தனம், தண்ணிர் முதலிய பொருள்கள் போலத் தனக்கேயாக என்னைக் கொள்ள வேண்டும்; இவ்வளவே யான் விரும்பும் புருஷார்த்தம்'98 என்கின்றார். சர்வேசுவரன் மூன்று விதமான சேதநரையும் சொரூபத்திற்குத் தகுதியாக அடிமை கொள்ளுகின்றான்; நாமும் அப்படியே சொரூபத்திற்குத் தகுதியான பேறு பெறுவோமே! என்று அருளிச் செய்கின்றார்' என்று இவ்விடத்தில் அருளிச் செய்வர் ஈட்டாசிரியர். 'முத்தரும் தித்தியரும், தாங்களும் ஆனந்தித்து அவனையும் ஆனந்திப் பார்கள்; பத்தர் தாங்கள் ஆனந்தியாமல் அவனை ஆனந் திப்பிப்பர்: இன்புறு விளையாட்டுடையான்" (திருவாய் 3.10;7) அன்றே. இப்பாசுரத்து ஈட்டின் ஐதிகம் : மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே என்று பிரார்த்திப்பானேன்? திருவுள்ளமான படி செய்கின்றான் என்றிருக்கை யன்றோ அழகியது" என்று பிள்ளை நறையூர் அரையர் எம்பாரைக் கேட்க, அதற்கு அவர். அருளிச்செய்த மறுமொழி இது: நீர் கேட்பது வாஸ் 20. புருஷார்த்தம்-பு ருஷன் - அர்த்தம்; புருஷன் ஆன்மா, அர்த்தம்-பொருள்-ஆன்மா அடைய வேண்டிய பொருள்; அதாவது வீடுபேறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/314&oldid=921009" இலிருந்து மீள்விக்கப்பட்டது