பக்கம்:வைணவ உரைவளம்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 293 நாளும் வலம் செய்து சென்று சேர்தல் நியாயமாகும்' என்கின்றார். 'வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கு-என்ற அடியில் ஓர் ஐதிகம். ஒரு சமயம் பிள்ளை கறையூர் அரையரும் யட்டரும் பிரதட்சிணம் பண்ணிக் கொண்டு வருகையில் நான் பின்னே சேவித்துக் கொண்டு போனேன்; அல்லா தார் கடுங் குதிரைப்போல் வாரா நிற்க, இவர்கள் திருக் கோபுரங்களையும் திருமாளிகைகளையும் கண்ணாலே பருகுவாரைப்போலே பார்த்துக் கொண்டு வந்தார்கள்" என்று அருளிச் செய்வர் நஞ்சீயர். மூன்றாம் பத்து 137 மழுங்காத வைக்நுதிய சக்கரால் வலத்தையாய் தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளுர்ந்து தோன்றினையே: மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும்பாயார்க் களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே? (மழுங்காத-மழுங்குதல் இல்லாத, வை துதியகூர்மை பொருந்திய வாயையுடைய, வலத்தையாய் - வலக்கையிலுடையாய் புள் -கருடன், மழுங்காத-சங்கல்ப ரூப; மலர் உலகம்-அகன்ற உலகம்; தொழும்பு ஆயார் -அடியவர்கள்; அளித்தால்-உதவினால்: மறையாதோ?-குன்றி விடாதோ?) انجمنسجمعیجمeeجمعجمعجم. 1. திருவாய், 3.1; 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/316&oldid=921013" இலிருந்து மீள்விக்கப்பட்டது