பக்கம்:வைணவ உரைவளம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 295 பெற்றது; எந்தை தந்தை தந்தை-என் குல நாதனான பெருமாள்) நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிப் பாசுரம், * மிக்க ஒலியோடு கூடிய அருவிகளையுடைய திருவேங் கடத்து எழுந்தருளியிருக்கின்ற அழகினைக் கொண்ட ஒளியுருவனும் என் குலநாதனுமான பெருமாளுக்கு எல்லை யில்லாத காலமெல்லாம் எல்லாவிடத்திலும் உடனிருந்து ஒன்றும் குறையாதபடி எல்லா அடிமைகளையும் செய்ய வேண்டும்' என்கின்றார் ஆழ்வார். ஒழிவில் காலமெல்லாம் : ஒர் ஐதிகம் ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் இந்திருவாய் மொழியைப் பாடப் புக்கால் ஒழிவில் காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம்..." என்று இங்ங்ணம் நெடும்போதெல்லாம் பாடி, மேல் போகமாட்டாதே அவ்வளவிலே தலைக் கட்டிப் போவாராம்' என்று. இதனால் அரையர் ஆழ்வா ருடைய நிலைமையை அப்படியே அடைந்து கைங்கரியத்தில் தமக்குரிய ஈடுபாட்டைக் காட்டியருளினர் என்பது பெறப் படும். வேங்கடத்து எழில்கொள் சோதி : வானார். சோதியையும் நீலாழிச் சோதியையும் வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு இவ்வாறு கூறுவர். வானார் சோதிபரமபத நாதன், நீலாழிச் சோதி-பாற்கடல் நாதன். வானார் சோதி பகல் விளக்குப் பட்டிருக்கும்; நீலாழிச் சோதி கடல் கொண்டு கிடக்கும்; வேங்கடத்து எழில் கொள் சோதி குன்றத் திட்ட விளக்காயிருக்கும்; வேங்கட மேய விளக்கே யன்றோ? பாசுரத்தின் ஐதிகம் : எம்பெருமானார் இத்திருவாய் மொழியை அரு எளிச் செய்யும்போது அந்தக் காலட்சேப கோஷ்டியில் நூற்றுக்கணக்காக எழுந்தருளியிருந்த சீடர் ക്കൂബജബ് 3. பெரி. திரு. 4.7:5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/318&oldid=921017" இலிருந்து மீள்விக்கப்பட்டது