பக்கம்:வைணவ உரைவளம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 297 T 39 வேங்க டங்கள்மெய்ம் மேல்வினை முற்றவும்: தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார் வேங்க டத்துறை வார்க்கு நமவென்னல் ஆங்க டமை, அ துசுமந் தார் கட்கே." (வேம்-வெந்துபோம் (அழிந்து போம்): கடங் கள்-அநுபவித்தே தீர்க்க வேண்டிய பாவங் கள் (பிராரத்தம்); மேல் வினை-இனி விளையக் கூடிய பாவங்கள் (ஆகாமியம்); முற்றவும்-எல்லா பாவங்களும்; தாங்கள்அடியவர்களான தாங்கள்; தங்கட்கு-தங்கள் சொரூபத்திற்கு நல்லனவே - ககு தியான வற்றையே; செய்வார்-செய்யப் பெறுவர் கள்; வேங்கடத்து-திருமலையில்; உறை வார்க்கு-கோயில் கொண்டிருக்கும் பெரு மானுக்கு; நம எனல்-நம: என்று சொல்லு வதாகின்ற; ஆம் கடமை அது-அந்தக் கடமை ைய; சுமந்தார்க்கு - வகிக்கிறவர் கட்கு) திருவேங்கடமுடைய எனுக்கு அடிமை செய்ய வேண்டும்' என்பதுபற்றிய திருவாய்மொழியில் ஒரு பாசுரம் இது. இதில் ஆழ்வார், "திருவேங்கடத்தில் எழுந் தருளியிருக்கின்றவர்க்கு வணக்கம் என்று சொல்லுதல் எளிதில் செய்யக் கூடிய காரியமாம்; அதனைச் சுமந்தவர் கட்கு தீர்க்கக் கூடிய கடன்களும் சரீர சம்பந்தங் காரண மாக வருகின்ற நல்வினை தீவினைகளும் வெந்து அழிந்து 4. திருவாய் 3.3:6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/320&oldid=921025" இலிருந்து மீள்விக்கப்பட்டது