பக்கம்:வைணவ உரைவளம்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 வைணவ உரை வளம் விடும்; அடியார்களாகிய தாங்கள, தங்கட்குத் தக்கதான கைங்கரியத்தையே செய்வார்கள்' என்கின்றார். வேம் கடன்கள் மெய்ம்மேல் வினை முற்றவும்-கடன்கள் மேல் வினை முற்றவும் வேம் (இது) மெய் என்று அந்: வயித்துப் பொருளுரைக்க. கடங்கள்-கடன்கள். எம்பெரு மான் நாம் செய்த பாவங்களை மன்னித்தருள்வது மாத்திரம் அன்றிக்கே பகைவர்கள் மேலும் போக்குவான். எத்தனையோ பிறப்புகளில் சஞ்சிதங்களாய் மலை மலை யாய்க் குவிந்து கிடக்கும் பாவங்கள் நம்முடைய சிறிய முயற்சியால் தொலைந்திடுமோ என்று சிலர் ஐயுற்றார் களாம்; அவர்கட்குப் பட்டர் ரலோக்திகளுடன் ஒர் இதிகாசம் எடுத்துரைத்தாராம்; இராமபிரான் கடலர சனை நோக்கி மூன்று நாள் தரை கிடந்து தவம் செய்தார்; அவ்வளவில் கடலரசன் முகம் காட்டா தொழியவே சீறிச் சிவந்து அக்கடல்மீது அம்பு தொடுத்து நின்றார். அதுகண்டு கடலரசன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து, அவன் நாலடி வர நின்றபோது, உனக்காக அம்பு தொடுத்தேன்" என்றுரைக்க நாணப்பட்டு, * உன் விரோதிகளைச் சொல்லுக, அவர்கள் மீது இவ்வம்பைச் செலுத்துசின்றேன்' என்று சொல்ல, அப்படியே அவன் தன் விரோதிகள் இருக்குமிடம் குறிப்பிட அங்கே அம்பைச் செலுத்தி உபகாரம் செய்தாரென்று வான்மீகி இராமாயணத்தால் அறிகின்றோம். வணங்கிய மாத்திரத்தில் சேதநன் பண்ணின பாவங்களையெல்லாம் மறப்பான் இறைவன். என்பதற்கு இந்த இதிகாசம் சான்று. இவ்விடத்தில் இன்னுமோர் ஐதிகத்தையும் அருளிச் செய்வர் பட்டர்: :பண்டு தலை மயிர் இல்லாத ஒருவன் நெல் அளந்து கொண்டு நின்றான்; அங்கே ஒருவன் சென்று மயிரைப் 5. கம்பரா. உயுத்த வருணனை வழி வேண்டும் படலத்தில் 64.80 செய்யுட்களில் இந்த வரலாற் றைக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/321&oldid=921026" இலிருந்து மீள்விக்கப்பட்டது