பக்கம்:வைணவ உரைவளம்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 வைணவ உரைவளம்

  • ஆன்மாக்கள் அனைத்தும் அவனே என்று விளக்கும் திருவாய்மொழியில் ஒரு பாசுரம் இது. இதில் ஆழ்வார் எனக்கு ஒரு துணையில்லாத சம்சார தசையிலே தன்னோடு உண்டான சம்பந்தத்தை அறிவித்தவன், என்னை நழுவ விடாதவன், குற்ற மற்றவனான எம்பெரு மானைச் சாதிமாணிக்கம் என்பேனோ? ஒளியைக்கொண்ட பொன் என்பேனோ? குணம் பொருந்திய முத்தம் என் பேனோ? உயர்ந்த சாதி வயிரம் என்பேனோ? கெடுதல் இல்லாத விளக்கு என்பேனோ? உலகத்திற்குக் காரணமான அழகிய பேரொளிப் பிழம்பான பரமபதம் என்பேனோ? முதன்மை பெற்ற அழகிய பரமபுருடன் என்பேனோ? யாது என்பேன்?' என்கின்றார்.

ஐதிகம்; ஒருவன் எம்பெருமானை நினைப்பதற்கு எனக்கு ஒரு விரகு சொல்ல வேண்டும்' என்று ஒரு பெரி யோரைக் கேட்க அதற்கு அவர், நான் உனக்கு அது சொல்லுகின்றேன்; நீ எனக்கு அவனை மறப்பதற்கு ஒரு விரகு சொல்ல வல்லையோ?” என்றாராம். இதற்குக் கருத்து: உலகத்துப் பொருள்கள் யாவும் பெயரை யும் உருவத்தையும் பெற்று வழங்கப் பெறுவது. எம்பெரு மான் அவ்வப் பொருள்களில் பிரவேசித்து நிற்பதனாலே யாதலால், ஏதேனும் ஒரு பொருள் தோற்றும் போதும் ஞானிகட்கு அவனை முன்னிட்டே தோற்றும் என்பது. இவ்வாறு எல்லாப் பொருள்களும் எம்பெருமானுடைய சம்பந்தத்தைப் பெற்றிருந்தாலும் சிறந்த மாணிக்கம் முதலியவைகளில் அவ்வெம்பெருமானது அம்சம் மிக் இருக்கும் என்று கருதி ஆழ்வார் இப்பாசுரத்தில் எம்பெரு மானை மாணிக்கம் முதலிய சிறந்த பொருள்களாகப் பாராட்டி அநுபவிக்கின்றனர். மேலும், பகவானினின்றும் வேறு பட்டிருக்கின்ற எல்லாப் பொருள்களுக்கும் அவனையொழியப் பொரு ளாதல், பெயரடைதல் முதலிய தன்மைகள் இல்லாமை யாலே, யாதேனும் ஒரு பொருள் தோன்றும்போதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/325&oldid=921033" இலிருந்து மீள்விக்கப்பட்டது