பக்கம்:வைணவ உரைவளம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வைணவ உரைவளம் முனிகளின் பேரர்), பெரிய நம்பிகள், திருமாலையாண்டான், இராமாநுசர் காலம் வரையிலும் கேள்வி வாயிலாகவே வழங்கி வந்து எம்பெருமானார் காலத்தில்தான் வியாக்கி யானம்' என்ற பெயரால் நூல் வடிவம் பெற்றது. இங்ங்னம் உரைவளர்ந்த வரலாற்றை அறிந்து கொள்வது இன்றிய மையாததாகின்றது. ஆறாயிரப்படி : இராமாதுசர் திருவாய் மொழி முதலான திவ்வியப் பிரபந்தங்கள் செழித்து வளரத் திருவுளங் கொண்டார். முதன்முதலாகத் திருக்குருகைப் பிரான் பிள்ளான் என்னும் தம் சீடரைக் கொண்டு ஆறாயிரப்படி என்ற வியாக்கியானம் இட்டருளினார். தெள்ளாரும் ஞானத் திருக்குரு கைப்பிரான் பிள்ளான் எதிராசர் பேரருளால்-உள்ளாரும் அன்புடனே மாறன் மறைப்பொருளை யன்றுரைத்த தின்பமிகும் ஆறா யிரம்' என்று கூறுவர் மணவாள மாமுனிகள். ஆறாயிரப்படி" என்பது ஆறாயிரங் கிரந்தங்கள் என்னும் அளவினை யுடையது என்பது பொருளாகும். ஒற்றொழித்து உயிரும் உயிர் மெய்யுமான முப்பத்திரண்டு எழுத்துகளை யுடையது ஒரு கிரந்தம் எனப்படும்?. படி என்பது, அளவு என்னும் பொருளையுடையதாக இவ்வியாக்கியானம் செய்யப்பட்டதாதலின் இஃது ஆறாயிரப்படி என்னும் பெயரைப் பெற்றது. இறைவனைப்பற்றிக் கூறுகின்ற விஷ்ணுபுராணம் ஆறாயிரம் கிரந்தங்களையுடையதாதலின் இறைவனைப்பற்றிக் கூறுகின்ற இத்திருமறைக்கும் அத் தொகையளவிலேயே இவ்வியாக்கியானத்தை அருளிச் கெய்தார் பிள்ளான். ஒன்பதினாயிரப்படி : இதனை அருளிச் செய்தவர் நஞ்சீயர். 1. உபதேசரத்தின மாலை (உ. ர. மா) - 41 2. யாப்பருங்கலக் காரிகை-பாயிர உரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/33&oldid=921043" இலிருந்து மீள்விக்கப்பட்டது